Monthly Archives: ஓகஸ்ட் 2011

வண்ணநிலவன் நேர்காணல் 3.

This gallery contains 1 photo.

சந்திப்பு: பவுத்த அய்யனார் முன் பகுதி:வண்ணநிலவன் நேர்காணல் 1.,வண்ணநிலவன் நேர்காணல் 2. கிராமம் நல்லவர்களைக் கொண்டதாகவும், நகரம் கெட்டவர்களைக் கொண்டதாகவும் பொதுப்புத்தியில் உறைந்துள்ள கருத்து சரியானது தானா? தவறு. நல்லவர் – கெட்டவர் என்பது கிராமம், நகரம், இனம், மொழி, ஜாதி, நாடு எவை சார்ந்தும் இல்லை. முழுக்க முழுக்க நல்லவர் என்றோ, கெட்டவர் என்றோ யாரும் இல்லை. … Continue reading

More Galleries | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கம்பாநதி 3

This gallery contains 6 photos.

இப்போதுகூட எழுதுவதை விடவும் படிப்பதுதான் இதமாகவும், சந்தோஷமளிப்பதாகவும் இருக்கிறது. நதிமூலம், ரிஷிமூலம் மாதிரி ஒவ்வொரு மனுஷருக்குள்ளும் அந்தர்வாகினியாய் ஒரு பிரதான உணர்ச்சி பிரவாஹமாக ஓடும். அந்த மாதிரி திருநெல்வேலி எங்களுக்கெல்லாம் அந்தர்வாஹினி. வண்ணநிலவன் முன் கதை:கம்பாநதி தொடரும்……. எஸ் ஐ சுல்தான்

More Galleries | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கணங்களை எழுத்தால் வளைத்துப் பிடித்தவர்

This gallery contains 1 photo.

வண்ணநிலவன்: ஜே.கே மொழிந்ததுபோல் கணங்களை எழுத்தால் வளைத்துப் பிடித்தவர் தேவமைந்தன் http://www.thinnai.com/index.phpmodule=displaystory&story_id=60804103&format=html கணங்கள், காலவெள்ளத்தில் நீர்க்குமிழிகள் போல் உடனே தோன்றி உடனே மறைய வல்லவை. அவற்றை எழுத்தால் பிடிப்பது என்பது எல்லோருக்கும் எளியதன்று. எளிமையாக வாழ்ந்து எளிமையாகப் பழகி அன்புடன் வாழக்கூடிய எழுத்தாளர்களுக்கே அது கைவரக் கூடும். அவ்வாறு வாழ்ந்த வல்லிக்கண்ணன் அவர்களால் வண்ணநிலவன் என்று … Continue reading

More Galleries | Tagged , , | 2 பின்னூட்டங்கள்

அவனுடைய நாட்கள்

This gallery contains 1 photo.

வண்ணநிலவன் கம்பெனிக்குப் போகும்போதே எதிரே ஆட்கள் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். இன்றைக்கும் வேலை இல்லையென்பது தெரிந்து போயிற்று. வெங்கடேஸ்வரா கபே திருப்பத்திலேயே கம்பெனியிலிருந்து ஆட்கள் வந்து கொண்டிருந்ததை அவனும் ஆவுடையும் பார்த்து விட்டார்கள். பேசாமல் அப்படியே வீட்டுக்குத் திரும்பியிருக்கலாம். ஆனால் ஆவுடை வீட்டுக்குத் திரும்பவில்லை. அவள் வராவிட்டாலும் பரவாயில்லை. அவனையும் வீட்டுக்குப் போக விட மாட்டாள். … Continue reading

More Galleries | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கம்பாநதி 2

This gallery contains 9 photos.

பள்ளு ‘சுதந்திரம் வந்தாச்சு’ சொர்க்கம் சமீபத்திலென்றார். சொர்க்கத்தைப் பார்த்தவர்கள் உடனே தகவல் தாருங்கள். – வண்ணநிலவன் முன் கதை: கம்பாநதி – தொடர்   தொடரும்……. புகைப்படம்: ராம்ஜி யஹோ எஸ் ஐ சுல்தான்

More Galleries | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பாம்பும் பிடாரனும்

This gallery contains 1 photo.

வண்ண நிலவன் வெகு நேரமாக ஊதிக்காட்டியும் அதற்குச் சினம் தணியவில்லை. ஏதோவொரு அபூர்வநிலையை எயிதுவதற்காக நின்றும், வளைந்தும் ஆடிக் கொண்டிருந்தது என்று நினைத்தான் பிடாரன். இருவரும் ஒருவரோடு ஒருவர் பழகி வாழ்ந்திருந்து, ஒத்த நிறத்தை அடைந்து இருந்தார்கள். சாம்பலும் கருப்பும் கலந்த ஒரு வர்ணத்தைப் பிடாரனும், பாம்பும் தோலின் நிறமாகப் பெற்றிருந்தார்கள்.யாரோ ஒருவருக்கு ஆதிநிறம் வேறொன்றாக … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

ரெயினீஸ் ஐயர் தெருக்காரர்களும் சாணை பிடிப்பவனும்

This gallery contains 3 photos.

  வண்ணநிலவன்   நாங்கள் நீண்டநாட்களாய் சாணைப் பிடிப்பவனைத் தேடிக் கொண்டிருக்கிறோம். பழைய சோற்றுக்கு, பத்து பைசா நாணயத்துக்கு, அப்பாவின் கிழிந்த சட்டைகளுக்கு, சாணை பிடித்துக் கொடுப்பான். மழை வந்து மேஜைக் கத்தி, கத்திரிக் கோல்களின் முனைகளெல்லாம் துருப் பிடித்து மிக மோசமாய் மழுங்கிக் கிடக்கின்றன. எங்கள் நினைவுகளில் முன்பிருந்த வெண்மைச் சுடர் பளிச்சிடுகிறது. அவன் … Continue reading

More Galleries | Tagged , , , , | 1 பின்னூட்டம்

வண்ணநிலவனின் ‘அழைக்கிறவர்கள் ‘ பாவண்ணன்

This gallery contains 1 photo.

புதிரின் திசையில் – எனக்குப் பிடித்த கதைகள்  பாவண்ணன் எங்கள் ஊர் திருக்குறள் கழகம் நடத்திய பல நிகழ்ச்சிகள் என் மனத்தில் பலவண்ணப் படிமங்களாக உறைந்து கிடக்கின்றன. அக்கழகம் நடத்திய பாட்டரங்குகள், சொற்பொழிவுகள், பட்டி மன்றங்கள், விவாதங்கள் எல்லாம் அறிவுக்கு விருந்தாக அமைந்திருந்தன. ஒருபுறம் அர.ராசாராமன். மறுபுறம் சு.கணேசனார். ஆளுக்கு ஓர் அணி. அ.ப.சுப்பரமணியன், பொன்னம்பலன், … Continue reading

More Galleries | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கேணி- வண்ணநிலவன் கலந்துரையாடல்

This gallery contains 1 photo.

கேணி- வண்ணநிலவன் கலந்துரையாடலின் (14-08-2011)தொகுப்பு ஞாநியின் முன்னுரையுடன் ஆரம்பமானது . வண்ணநிலவனின் படைப்புகளையும், http://www.natpu.in/ எனும் வலைத்தளத்தில் இலக்கியம் என்ற பகுதியில் அவ்ர் எழுதி வரும்’பின்னகர்ந்த காலம்’ என்ற தொடரையும் வாசித்ததாகவும், தான் 2 இட்ங்களில் கண்ணீர் விட்டதாகக் குறிப்பிட்டார். நண்பர்கள் கொடுத்த வேட்டி, சட்டைகளை அணிந்தததையும்,நெருங்கிய நண்பர் திருமணத்திற்குச் சென்றும் தன்னால் பரிசு எதுவும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

வண்ணநிலவன் நேர்காணல் 2.

This gallery contains 1 photo.

சந்திப்பு: பவுத்த அய்யனார் முன் பகுதி:வண்ணநிலவன் நேர்காணல் 1. திருநெல்வேலியிலிருந்து புலம் பெயர்ந்த பிறகான வாழ்வனுபவங்கள் பற்றிச் சொல்லுங்கள்? ப : திருநெல்வேலியிலிருந்தால் முன்னேறமுடியாது என்று தோன்றியது. எஸ்.எஸ்.எல்.சி.யில்மார்க் மிகக் குறைவு. வேலை வாய்ப்பு அலுவலகத்திலிருந்து ஒரு இண்டர்வியூ கார்டு கூட வரவில்லை.அக்கால இளைஞர்களைப் போல் டைப் ரைட்டிங்பயிற்சிக்குச் செல்வதற்கான வசதி இல்லை.கடைசியாகப் பாளையங்கோட்டையில் பார்த்தவக்கீல் குமாஸ்தா … Continue reading

More Galleries | Tagged , , , | 1 பின்னூட்டம்

கம்பாநதி…….தொடர்

This gallery contains 7 photos.

இலக்கியம் என்பது ரசனைதான். எல்லோராலும் ரசிக்கப்படுவதால், எல்லோருக்கும் பிடித்திருப்பதால் கலை வாழ்கிறது. சாதிப்பிரச்சினையை வைத்து ஒரு கதை எழுதினேன். அந்தப் பிரச்சினை என்னைப் பாதித்தது எழுதினேன். அவ்வளவுதான் கலையில் முடியும். அதிர்ஷ்டவசமாய் கலையில் தீர்வு இருக்கலாம். எனக்கு முக்கியமானது கலைதான் வண்ணநிலவன் தொடரும்…..  

More Galleries | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

முத்துக்கள் பத்து ( வண்ணநிலவன்)

This gallery contains 1 photo.

  மோகன் குமார் முத்துக்கள் பத்து என்கிற தலைப்பில் வண்ணநிலவன் அவர்களின் சிறந்த பத்து கதைகளை எழுத்தாளர் திலகவதி தொகுத்துள்ளார். இது ஒரு அம்ருதா பதிப்பக வெளியீடு. இதே போல் தமிழின் பிற சிறந்த எழுத்தாளர்களின் சிறந்த பத்து கதைகளும் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது. முன்னுரையில் திலகவதி வண்ணநிலவன் எழுத்துகள் பற்றி அழகாக சொல்லி செல்கிறார். பின் … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

‘வண்ணநிலவனி’ன் கடல்புரத்தில் ஒரு பார்வை

This gallery contains 1 photo.

வே. சபாநாயகம் கடலோர மீனவர் வாழ்வை அசலாகச் சித்தரித்த ‘தகழி’யின் ‘செம்மீன்’ நாவலுக்குப் பிறகு அந்த வாழ்க்கையைச் சொல்லும் பல நாவல்கள் வந்திருந்தாலும் ‘வண்ணநிலவனி’ன் ‘கடல்புரத்தில்’ நாவலே என்னை வெகுவாகக் கவர்ந்த நாவல். ‘செம்மீனை’ப் போலவே- ஒரு அழகான காதல், சோகத்துடன் முடிவதுடன்ஆசாபாசங்களும், நம்பிக்கைகளும், துரோகங்களும், போராட்டங்களும் நிறைந்த அவர்களது வாழ்வின் யதார்த்தமான, மிகைப்படுத்தாத சித்தரிப்புகள் … Continue reading

More Galleries | Tagged , , , , | 1 பின்னூட்டம்

வண்ணநிலவன்-கேணி- ஞாநி

This gallery contains 2 photos.

கேணியின் அடுத்த கூட்டம் ஆகஸ்ட் 14, ஞாயிறு மாலை 4 மணி. பேசுபவர்: எழுத்தாளர் வண்ணநிலவன் ( துர்வாசர்) இடம்: 39 அழகிரிசாமி சாலை கலைஞர் கருணாநிதி நகர். சென்னை 78. ஞாநி……….…..கலைஞர் கருணாநிதி நகரில் மே 2009ல் குடிபெயர்ந்து வந்ததும் இந்த வீட்டில் என்னைக் கவர்ந்த முதல் விஷ்யம் பின்னால் உள்ள தோட்டப்பகுதியும் கிணறும்தான். … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

வாத்தியாரோடு கச்சேரி – பா ராகவன்

This gallery contains 1 photo.

பா ராகவன் நீண்ட நெடு நாள்களுக்குப் பிறகு நேற்றிரவு எதிர்பாராவிதமாக திரு. வண்ணநிலவனுடன் பேசவேண்டும் என்கிற உத்வேகம் ஏற்பட்டு போன் செய்தேன். இரவு ஒன்பது மணிக்கு மேல் தொடங்கி வெகுநேரம் என்னென்னவோ பேசிக்கொண்டிருந்தோம். எத்தனை வருஷங்கள் கழித்துப் பேசினாலும், எந்தத் தருணத்தில் பேசினாலும், என்ன பேசினாலும் – மாறாத அதே குரல், அதே கனிவு, அதே … Continue reading

More Galleries | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

என் மனதுக்கு நெருக்கமான புத்தகங்கள்

This gallery contains 1 photo.

ரெயினீஸ் ஐயர் தெரு  கூடுசாலை   ஜெ.ஜெயமார்த்தாண்டன் வண்ணநிலவன் எழுதிய ரெயினீஸ் ஐயர் தெரு. என்பதுகளில் கணையாழி மூலமாக சுஜாதா,பாலகுமாரனைத் தாண்டி தமிழில் வேறுவகை எழுத்து இருப்பதை நான் அறியத்தொடங்கிய காலம். அது மாதிரியான எழுத்துக்களை தஞ்சாவூர் மைய நூலகத்தில் தேடித்தேடி படித்துக்கொண்டிருந்தபொழுது ஒரு நாள் என் கையில் கிடைத்த சின்ன புத்தகம். ரெயினீஸ் ஐயர் தெரு. … Continue reading

More Galleries | Tagged , , , , | 2 பின்னூட்டங்கள்

ரெயினீஸ் ஐயர் தெரு- பரிந்துரை: ஜெகதீஷ் குமார்

This gallery contains 2 photos.

  எதிரும் புதிருமாக ஆறே வீடுகளைக் கொண்ட சிறிய தெருவைக் களமாகக் கொண்டு ஒரு அழகான சிறிய நாவலைப் படைத்திருக்கிறார் வண்ணநிலவன். வாசிக்க ஆரம்பித்து மூன்று மணி நேரத்தில் ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டேன். சற்று நேரம் அமர்ந்து அமைதியாக யோசித்துப் பார்த்தால் நம்மைச் சுற்றி வாழும் மனிதர்களுக்கு நாம் எந்த அளவில் நம் … Continue reading

More Galleries | Tagged , , , , | 1 பின்னூட்டம்

வண்ணநிலவன் கவிதைகள்

This gallery contains 1 photo.

என்னைப் பிட்டேன் உலகமாயிற்று. உலகத்தைப் பிட்டேன் நானானேன். ☯ பகை அல்லது முரண்பாடு தாவரம் தானென்றாலும் ஆப்பிள்மரமும் தேவதாருவும் ஒன்றாகாத உலகமிது. ஊர்வன, பறப்பன, மிருகங்கள்கூட. திமிங்கலமும், சிலேபி மீனும் மீனினமென்று கடையில் விற்றாலும் பகையறியாமல் போவேனோ? ஆனபோதும் மீனினம் மீனினம்தான். தாவரம் தாவரமே. ☯ ……………………………………..வண்ணநிலவன்

More Galleries | Tagged , , , | 1 பின்னூட்டம்

வீட்டுக்கார சொர்ணத்தாச்சி

‘   வண்ணநிலவன்   என்னடா இந்தப் பொம்பளை இத்தனை கண்டிஷன் போடுதாளென்னு வருத்தப் படாதீய.. எதையுமே கறாராப் பேசிக்கறது ஒங்களுக்கும் நல்லது எனக்கும் நல்லது. . என்ன சொல்லுதீய.. ? ‘ ‘சரிதான் சொல்லுங்க… ‘ ‘பம்பு அடிக்கும் போது மெதுவா அடிக்கணும். தக்கு புக்குன்னு அடிக்கக் கூடாது. பம்புக்கு வாஸர் போடணும்னா வாடகைக்குக் குடியிருக்கவுஹ … Continue reading

More Galleries | Tagged , , , , | 1 பின்னூட்டம்

வண்ணநிலவன் நேர்காணல் 1.

This gallery contains 2 photos.

சந்திப்பு: பவுத்த அய்யனார் என்னுடைய பூர்வீகம் என்று பார்த்தால், நான் தாதன்குளத்துக்காரன். திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் ரயில் பாதையில் திருநெல்வேலியிலிருந்து மூன்றாவது ஸ்டேஷன் தாதன்குளம். இதுதான் என் முன்னோர்களின் ஊர். என்னுடைய முதல் வகுப்புக் கல்வி இந்த ஊரில்தான் ஆரம்பமாயிற்று. அந்தக் காலத்தில் முதல்முதலாகப் பள்ளிக் கூடத்தில் சேர்ப்பதைப் ‘படிக்கப் போடுவது’ என்பார்கள். இப்போது உள்ளது போல் ஜூன் மாதம் படிக்கப் போடாமல், சரஸ்வதி பூஜையின் போதுதான் படிக்கப் … Continue reading

More Galleries | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக

மெஹ்ருன்னிஸா …தொடர்ச்சி

This gallery contains 10 photos.

எனக்கு எழுத்து எப்போதுமே தாகம் அல்ல. எதோ தோணிச்சி எழுதினேன். இலக்கியத்தை மேலெழுந்த வாரியாகச் செய்ய இஷ்டமில்லை. எதையாவது எழுதுவது என்று நான் எழுதுவதில்லை. என் பெயரைக் காப்பாற்ற வேண்டும் என்றோ வாராவாராம் என் பெயர் பத்திரிகையில் வரணும்னோ, என் நோக்கம் கிடையாது. பொறக்கும் போது பேனாவோடா பொறந்தேன்? சாகும்தன்னியும் எழுதிக்கிட்டே இருக்கணும்கிற சங்கல்பமும் இல்லை. … Continue reading

More Galleries | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பலாப் பழம்

This gallery contains 2 photos.

வண்ணநிலவன் பக்கத்து வீட்டுக்குப் பலாப் பழம் வந்திருக்கிறது. செல்லப் பாப்பா புரண்டு படுத்தாள். கனமான அடி வயிறுதான் சட்டென்று சிமெண்டுத் தரையின் குளுமையை முதலில் உணர்ந்தது. உடம்பெல்லாம் ஒரு விதமான கூச்சம் பரவிற்று. பல திரிகள் கட்டையாகிவிட்டன. மாற்ற வேண்டும். சிலது எரியவே இல்லை. தீ சரியாக எரியாமல், அடுப்பி ல் எதை வைத்தாலும் இறக்குவதற்கு நேரமாகிவிடுகிறது. … Continue reading

More Galleries | Tagged , , , | 1 பின்னூட்டம்