வண்ணநிலவன் கவிதைகள்

என்னைப் பிட்டேன்
உலகமாயிற்று.
உலகத்தைப் பிட்டேன்
நானானேன்.
பகை அல்லது முரண்பாடு
தாவரம் தானென்றாலும்
ஆப்பிள்மரமும்
தேவதாருவும் ஒன்றாகாத உலகமிது.
ஊர்வன, பறப்பன, மிருகங்கள்கூட.
திமிங்கலமும், சிலேபி மீனும்
மீனினமென்று கடையில் விற்றாலும்
பகையறியாமல் போவேனோ?
ஆனபோதும் மீனினம் மீனினம்தான்.
தாவரம்
தாவரமே.
……………………………………..வண்ணநிலவன்
This entry was posted in அனைத்தும், வண்ணநிலவன், வண்ணநிலவன் கவிதைகள் and tagged , , , . Bookmark the permalink.

1 Responses to வண்ணநிலவன் கவிதைகள்

  1. என்னைப் பிட்டேன்
    உலகமாயிற்று.
    உலகத்தைப் பிட்டேன்
    நானானேன்.
    – வண்ணநிலவன்.
    அற்புதமான வரிகள். உலகே நாமாகவும் நாமே உலகமாகவும் எண்ணத் தொடங்கிவிட்டால் உலகில் பிரச்சனைகள் ஏதும் இராது. நன்றி.

பின்னூட்டமொன்றை இடுக