Monthly Archives: நவம்பர் 2011

வண்ணதாசன் வண்ணநிலவனுக்கு எழுதிய கடிதங்கள்

This gallery contains 1 photo.

நீங்களோ, நானோ, இன்னொரன்ன பிறரோ நாம் இப்படி இருப்பது குறித்து துக்கம் கொள்ளத் தேவையில்லை. நாம் இப்படி இருக்குமாறே மற்றவர்கள் எல்லாம் அப்படி இருக்கிறார்கள். இந்த — வயதின் புறவுலக அகவுலக ஷீணங்களுக்கு மத்தியிலும் பார்க்கிற ஒவ்வொரு ஆணும் பெண்ணும் நுட்பமான ஒரு இடத்தை எனக்குக் கொடுத்து விடுகிறார்கள். கிட்டத்தட்ட ஒக்கலில் வைக்காத குறைதான் … … Continue reading

Gallery | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வண்ணநிலவனின் – என் ஊர்

This gallery contains 2 photos.

தகர ரயிலும்…ஸ்ரீராம் பாப்புலர் சர்வீஸும் ! மானா.பாஸ்கரன் ( நன்றி: என் விகடன், 30-11-2011)  ‘கடல்புரத்தில்..’, ‘எஸ்தர்’ போன்ற காலத்தால் அழிக்க முடியாத படைப்புகளால் தமிழ் இலக்கிய அன்னைக்குப் பெருமை சேர்த்த எழுத்தாளர் வண்ணநிலவன் தன் சொந்த ஊரான ‘தாதன் குளம்’ பற்றி நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்…  ‘திருநெல்வேலிக்கும் திருச்செந்தூருக்கும் இடையில் உள்ள இருப்புப் பாதையில் உள்ள … Continue reading

Gallery | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

மழைப் பயணம்

This gallery contains 1 photo.

வண்ணநிலவன் தட்டச்சு உதவி : சித்திரவீதிக்காரன் ”அங்க போயி மரம் மாதிரி நிக்காதீங்க… ஒங்க தங்கச்சிகிட்டவும் அம்மாகிட்டவும் பேசுங்க!”  ”என்னய போகச் சொல்லுதியே… நீயே போயிட்டு வந்தா என்ன?” ”ஒங்க தலையில என்ன களிமண்ணா இருக்கு? பொம்பள போயிப் பேசதுக்கும் ஆம்பள பேசதுக்கும் வித்தியாசம் இருக்குய்யா. நீங்க ஒங்க தங்கச்சி, அம்மாங்கிற உருத்தோட பேசலாம். நான் … Continue reading

Gallery | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

ரெயினீஸ் ஐயர் தெரு 2B

This gallery contains 11 photos.

வண்ணநிலவன்   எதிர்த்த வீட்டில் இருதயத்து டீச்சர் வசிக்கிறாள். அவளது கணவன் சேசய்யாவுக்குப் பன்னிரண்டு வருஷங்களாகத் தொண்டைப் புகைச்சல். சதா கோழி இறகை காதில் வைத்துத் திரித்துக் குடைந்து கொண்டிருக்கும், கருப்பட்டிப் புகையிலைத் துண்டு மாதிரி தொங்கும் சுருங்கிப்போன மார்புகள் கொண்ட அவளது அத்தையம்மாள் இடிந்தகரையாள் (அவள் நிஜப்பெயர் அவளுக்கே தெரியாது. இந்திய சர்க்காரின் சென்சஸ் … Continue reading

Gallery | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கடல்புரத்தில் 1.1

This gallery contains 8 photos.

கடலோர மீனவர் வாழ்வை அசலாகச் சித்தரித்த ‘தகழி’யின் ‘செம்மீன்’ நாவலுக்குப் பிறகு அந்த வாழ்க்கையைச் சொல்லும் பல நாவல்கள் வந்திருந்தாலும் ‘வண்ணநிலவனி’ன் ‘கடல்புரத்தில்’ நாவலே என்னை வெகுவாகக் கவர்ந்த நாவல். ‘செம்மீனை’ப் போலவே- ஒரு அழகான காதல், சோகத்துடன் முடிவதுடன்ஆசாபாசங்களும், நம்பிக்கைகளும், துரோகங்களும், போராட்டங்களும் நிறைந்த அவர்களது வாழ்வின் யதார்த்தமான, மிகைப்படுத்தாத சித்தரிப்புகள் நெஞ்சை உருக்குவதாகவும், … Continue reading

Gallery | Tagged | பின்னூட்டமொன்றை இடுக