Monthly Archives: ஜூலை 2011

மெஹ்ருன்னிஸா

This gallery contains 18 photos.

புதுமைப்பித்தனைப் போல் என் சிறுகதைகளிலும் நாவல்களிலும் நிறைய பரிசோதனை முயற்சிகளைச் செய்திருக்கிறேன். ஒன்றை மாதிரி ஒன்றை நான் எழுதுவதே இல்லை. இந்த என் பரிசோதனை முயற்சி ஒருவேளை வாசகனை எட்டாமல் போயிருக்கலாம். என் தாமிரபரணிக் கதைகளைப் பார்த்தால் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு முகத்தோடு இருக்கும். வண்ணநிலவன் தொடரும்… எஸ் ஐ சுல்தான் Advertisements

படத்தொகுப்பு | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சாரதா

This gallery contains 1 photo.

வண்ணநிலவன் பிரம்மதேசம் வெங்கய்யர் என்ற வெங்கிடாசலம் ஐயரின் மூத்தாள் புதல்வி சாரதாவை திருநெல்வேலி மாஜிஸ்திரேட் கோர்ட் வராந்தாவில் உட்கார்த்தி வைத்திருந்தது. தாமிரவருணிக் கரை மேல் போகிற கொக்கிரகுளம் ரோட்டையும், ரோட்டிற்குக் கீழே போகிற ஆற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள் சாரதா. சின்னப்பிள்ளையாக இருக்கையில் இதே ரோட்டில் அப்பாவோடும், அம்மாவோடும் கிட்டு மாமாவுடைய கல்யாணத்துக்காக நடந்து … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , | 1 பின்னூட்டம்

வண்ணநிலவன் எழுத்துமுறை -வே.சபாநாயகம்.

This gallery contains 1 photo.

  1. உங்களது இலக்கியக் கொள்கை என்ன? இலக்கியம் என்பது ரசனைதான். எல்லோராலும் ரசிக்கப்படுவதால், எல்லோருக்கும் பிடித்திருப்பதால் கலை வாழ்கிறது. சாதிப்பிரச்சினையை வைத்து ஒரு கதை எழுதினேன். அந்தப் பிரச்சினை என்னைப் பாதித்தது எழுதினேன். அவ்வளவுதான் கலையில் முடியும். அதிர்ஷ்டவசமாய் கலையில் தீர்வு இருக்கலாம். எனக்கு முக்கியமானது கலைதான். 2. உங்களை வெளி உலகுக்கு பிரபலப்படுத்திய … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , | 2 பின்னூட்டங்கள்

ஆரம்பமாக.. வல்லிக்கண்ணன்

This gallery contains 1 photo.

வண்ணநிலவன் https://tamilhelp.wordpress.com/2009/03/02/ இப்போதுகூட எழுதுவதை விடவும் படிப்பதுதான் இதமாகவும், சந்தோஷமளிப்பதாகவும் இருக்கிறது. நதிமூலம், ரிஷிமூலம் மாதிரி ஒவ்வொரு மனுஷருக்குள்ளும் அந்தர்வாகினியாய் ஒரு பிரதான உணர்ச்சி பிரவாஹமாக ஓடும். அந்த மாதிரி திருநெல்வேலி எங்களுக்கெல்லாம் அந்தர்வாஹினி. திருநெல்வேலியை ஒவ்வொரு இலக்கியகர்த்தாவும் ஒவ்வொரு விதமாகக் காட்டுகிறார்கள். குற்றாலத்தை திரிகூடராசப்ப கவிராயரை விட இன்னொருவர் அவ்வளவு நளினமாகக் சொல்லிவிட முடியுமா … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , | 1 பின்னூட்டம்

கடல்புரத்தில்

This gallery contains 1 photo.

  வண்ணநிலவன் ஊரிலே என்ன நடந்தால் தான் என்ன? அறுப்பின் பண்டிகை வந்துவிட்டது. கோயில் முன்னே இருக்கிற உயரமான கொடிக் கம்பத்தில் சிவப்புப் பட்டுத்துணியில் காக்காப் பொன்னிழைகள் பதிக்கப்பட்ட கொடி பறக்க ஆரம்பித்துவிட்டது. தினமும் காலையிலும் மாலையிலும் ஆராதனைகள் நடந்தன. அனேகமாக எல்லா வீடுகளிலும் விருந்தினர்கள் நிரம்பியிருந்தார்கள். பக்கத்து ஊர்களில் கல்யாணமாகியிருந்த பெண்கள் தங்கள் கணவன் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , | 2 பின்னூட்டங்கள்

எஸ்தர்

This gallery contains 1 photo.

வண்ணநிலவன்  முடிவாகப் பாட்டியையும் ஈசாக்கையும் விட்டுச் செல்வதென்று ஏற்பாடாயிற்று. மேலும், பிழைக்கப் போகிற இடத்துக்குப் பாட்டி எதற்கு? அவள் வந்து என்ன காரியம் செய்யப் போகிறாள்? நடமாட முடியாது, காது கேளாது, பக்கத்தில் வந்து நின்றால், அதுவும் வெளிச்சமாக இருந்தால்தான் தெரிகிறது. ஒரு காலத்தில் பாட்டிதான் இந்த வீட்டில் எல்லாரையும் சீராட்டினவள். பேரப்பிள்ளைகளுக்கெல்லாம் கடைசியாகப் பிறந்த … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , | பின்னூட்டமொன்றை இடுக

என் சக பயணிகள் –- ச.தமிழ்ச்செல்வன்

This gallery contains 1 photo.

ச.தமிழ்ச்செல்வன் “தலையைக் குனிந்தபடியே நடந்து வந்து கொண்டிருந்தான்” வண்ணநிலவன் பற்றிச் சிறிய மின்னலென ஒரு நினைப்பு வரும்போது இந்த ஒரு வரி கூடவே சேர்ந்து வந்து நிற்கும். என் மனதில் பதிந்துள்ள வண்ணநிலவனின் சித்திரத்தோடு சேர்ந்த ஒரு தீற்றலாகவே இந்த ஒரு வரி. அவர் எழுதிய கரையும் உருவங்கள் சிறுகதையின் முதல் வரி இது. நவீன … Continue reading

படத்தொகுப்பு | Tagged , | 2 பின்னூட்டங்கள்