வண்ணநிலவன் குறித்து

1948ல் பிறந்த வண்ணநிலவன் என்று அழைக்கப்படும் உ.நா.ராமச்சந்திரன் திருநெல்வேலியைச் சேர்ந்தவர். துக்ளக் பத்திரிகை யில் சில காலம் பணியாற்றிய வண்ண நிலவன், தமிழில் குறிப்பிடத்தகுந்த திரைப்படமான ருத்ரையாவின் “அவள் அப்படித்தான்” திரைபடத்தின் வசனகர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார். இவரது “கடல்புரத்தில்” நாவல் இலக்கிய சிந்தனை பரிசு பெற்ற நாவல். இவரது ”கம்பா நதி” நாவல் தமிழக அரசின் பரிசை பெற்றது. எஸ்தர், பாம்பும் பிடாரனும், தேடித் தேடி, உள்ளும் புறமும், தாமிரபரணிக் கதைகள் போன்றவை இவரது முக்கிய சிறுகதைத் தொகுதிகள். மெய்பொருள்,காலம் இவைகள் இவரது கவிதை தொகுப்புகள்
மேலும்:
உ.நா. ராமச்சந்திரன் (வண்ணநிலவன்)
பிறப்பு : 15.12.1949
பிறந்த ஊர் : திருநெல்வேலி
தந்தை : உலகநாதபிள்ளை
தாய : ராமலட்சுமி அம்மாள்
வசித்த ஊர்கள் : தாதன்குளம்,
திருநெல்வேலி,
ஸ்ரீவைகுண்டம்,
பாளையங்கோட்டை,
பாண்டிச்சேரி, சென்னை
எழுதத் தொடங்கிய ஆண்டு : 1970
முதல் கதை : மண்ணின் மலர்கள்
முதல் நாவல் : நேசம் மறப்பதில்லை
நெஞ்சம்
திருமண வருடம் : 07.04.1977
மனைவி : சுப்புலட்சுமி
மகன் : ஆனந்த் சங்கர்
மகள்கள் : சசி, உமா
பேரன் : அபிஷேக்
பேத்தி : ஸ்ரீசஞ்சனா
வெளிவந்துள்ள நூல்கள்
நாவல்: நேசம் மறப்பதில்லை நெஞ்சம் (1975), கடல்புரத்தில் (1977),
கம்பாநதி (1979), ரெயினீஸ் அய்யர் தெரு (1981), காலம்(2006)
சிறுகதை: எஸ்தர் (1976), தர்மம் (1983), உள்ளும் புறமும் (1990),
தாமிரபரணிக் கதைகள் (1992), தேடித் தேடி கதைகள்(1996),
யுகதர்மம்(1996), வண்ணநிலவன் கதைகள்(2001).
கவிதை: மெய்ப்பொருள்(1981), காலம்.
பதிப்பகங்கள்:
கவிதா(நச்சினார்க்கினியன்), நர்மதா, பூஞ்சோலை, அன்னம், சந்தியா,
விகடன், வைகறை (கோவை), பரிசல், கிழக்கு.
இப்போது வண்ணநிலவனின் கதைகள், நாவல்கள், கட்டுரைகள்
எல்லாவற்றையும் கிழக்குப் பதிப்பகம் நூலாக்கி வருகிறது.
இவரது பல கதைகள் ஆங்கிலம், இந்தி, மலையாளம் மற்றும்
கவிதைகள் ஜெர்மன் மொழியிலும் மொழிபெயர்க்கப்
பட்டுள்ளன.
தொடர்பு முகவரி:
வண்ணநிலவன்
ஜி-1, சின்முத்ரா அபார்ட்மெண்ட்ஸ்
14, முதல் குறுக்குத் தெரு
யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம்
சென்னை – 600 024.
தொடர்பு எண்கள்: 044-2473 1929, 97899 83529.

 

1 Response to வண்ணநிலவன் குறித்து

  1. எல்லாம் பெரிய விஷயங்கள்தான்; எல்லோரும் உயர்வானவர்கள்தான். மனிதர்களுக்கு அன்பு என்கிற பெரிய வஸ்து அளிக்கப்பட்டிருக்கிறது. மனிதனை நெருங்குகிறதுக்கு எவ்விதத் தடையுமில்லை. எவ்வளோ இழந்தாலும் பெறுகிறதற்கும் எதாவது இருந்து கொண்டேதான் இருக்கிறதென்று நினைக்கிறேன். ஸ்ரீ சுந்தர ராமசாமி சொன்னது மாதிரி, ‘எதையாவது இழந்துதான் எதையாவது பெறுகிறோம்’ என்பது திரும்பத் திரும்ப நிரூபிக்கப்படுகிறது. கலை, மனம் சம்பந்தப்பட்டது; ரசனை பூர்வமானது; உண்மையோடு நெருங்கிய சம்பந்தமுள்ளது. நல்ல கலைஞன் ஜனங்களிடம் பொய்சொல்ல மாட்டான். கலைக்கு பொய் ஆகாது. – வண்ணநிலவன்

    டிசம்பர் பதினைந்தாம் தேதி பிறந்த வண்ணநிலவன் அவர்கள் பல்லாண்டு காலம் நலமோடும், மகிழ்வோடும் வாழ மதுரையையும், தமிழையும் வேண்டுகிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s