Tag Archives: கடல்புரத்தில்

அன்பின் சுடர் மின்னும் கலங்கரை விளக்கம்

This gallery contains 1 photo.

முனைவர் ப. சரவணன் http://www.vadakkuvaasal.com/component/content/article/437.html வண்ணநிலவனின் கடல்புரத்தில் மகத்தான புனைவுகள்:  கடலும் கடல் சார்ந்த வாழ்வும் நெய்தல் திணைக்குரியது.  நெய்தலில் வாழும் பெண்களுக்கு மணலும் ஆண்களுக்குக் கடலும் நிலப்பரப்பாக, வாழ்க்கை வெளியாக அமைகின்றன. கடற்கரையைத் தொட்டுச் செல்லும் கடலின் அலைக்கரங்கள் மணலுக்கும் கடலுக்குமான மக்களின் ஊடாட்டத்தைக் காட்சிப்படுத்துகின்றன. இந்த ஊடாட்டம் அன்பால் நிலைபெறுவதாக வண்ணநிலவனின் ‘கடல்புரத்தில்’ நாவல் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , | 3 பின்னூட்டங்கள்

வெளியிலிருந்த பார்த்த ஆச்சரியம்: வண்ணநிலவனின் கடல்புரத்தில்

This gallery contains 1 photo.

அ.ராமசாமி http://ramasamywritings.blogspot.com/2012/01/blog-post_13.html தமிழ்ச் சிறுகதை தோன்றிய பத்தாண்டுகளிலேயே நவீன சிறுகதையாக மாறி விட்டது. ஆனால் தமிழ் நாவல் தன்னை நவீனமாக்கிக் கொள்ள எடுத்துக் கொண்ட காலம் முக்கால் நூற்றாண்டு என்பது நாவல்  வரலாற்றில் சொல்லப்பட வேண்டிய உண்மை. தொடர் நிகழ்வுகளை அடுக்கி நீண்ட வரலாற்றைச் சொல்ல உரைநடையை வெளிப்பாட்டுக் கருவியாக  மாற்றிக் கொண்ட போதிலும், காவியபாணியும் புராணிகத் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , | 2 பின்னூட்டங்கள்

கடல்புரத்தில் 3

This gallery contains 15 photos.

வண்ணநிலவன் வண்ணநிலவனின் ‘கடல்புரத்தில்’ என்னை அதிகம் ஈர்த்தற்கு காரணம் வாசித்து முடித்ததும் எல்லா மனிதர்களின் மீதும் அன்பு பெருகியது. கடல்புரத்தின் ஈரத்தை தன் எழுத்தில் பாய்ச்சி வண்ணநிலவன் நம் நெஞ்சிலும் அன்பை பெருகச்செய்கிறார். இந்நாவலில் வரும் பெரும்பாலான கதாபாத்திரங்கள் கொச்சையாகப் பேசினாலும், அவர்கள் இதயங்களில் அன்பு  கசிந்து கொண்டேதானிருக்கிறது. இவ்வளவு அன்பான மனிதர்களைக் காசு வாங்கிக்கொண்டு … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , | 3 பின்னூட்டங்கள்

வண்ணநிலவனுடன் கடல்புரத்தில்

This gallery contains 2 photos.

  சித்திரவீதிக்காரன் http://maduraivaasagan.wordpress.com/2011/12/15/ டிசம்பர் பதினைந்தாம் தேதி பிறந்தநாள் காணும் வண்ணநிலவன் அவர்கள் பல்லாண்டு மகிழ்வோடு வாழ மதுரையையும், தமிழையும் வேண்டுகிறேன். உயிருக்கு உலைவைக்கும் அணுஉலைக்கெதிராக போராடி வரும் கடல்புரத்து மக்களையும், போராட்டக் குழுவினரையும் வணங்கி இப்பதிவைத் தொடங்குகிறேன்.   வண்ணநிலவனின் கடல்புரத்தில் தமிழின் சிறந்த நாவல்களுள் ஒன்று. அதைக் குறித்த சா.கந்தசாமியின் பகிர்வைப் பார்ப்போம். கடல்புரத்தில், பரபரப்பூட்டும் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

கடல்புரத்தில் 2

This gallery contains 10 photos.

வண்ணநிலவன் (சமீபத்தில் வண்ண நிலவன் எழுதிய ‘கடல்புரத்தில்’ நாவல் படித்தேன். வாசிக்க வாசிக்க, மனதிற்கு மிகுந்த நெருக்கமான படைப்போடு ஊடாடிக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர நேர்ந்தது. மிகவும் எளிமையான மொழி, நுட்பமான விவரணை, எளிய காட்சியமைப்பு. முப்பது வருடங்களுக்கு முன் இருந்த ஒரு கடற்கரை கிராமத்தையும்,எளிய மீனவர்களையும், வாழ்கையை அவர்கள் எதிர்கொள்ளும் முறையையும்  நூறு பக்கங்களில் நுட்பமாகச் சொல்லிய விதம் ஒரு … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கடல்புரத்தில் 1.1

This gallery contains 8 photos.

கடலோர மீனவர் வாழ்வை அசலாகச் சித்தரித்த ‘தகழி’யின் ‘செம்மீன்’ நாவலுக்குப் பிறகு அந்த வாழ்க்கையைச் சொல்லும் பல நாவல்கள் வந்திருந்தாலும் ‘வண்ணநிலவனி’ன் ‘கடல்புரத்தில்’ நாவலே என்னை வெகுவாகக் கவர்ந்த நாவல். ‘செம்மீனை’ப் போலவே- ஒரு அழகான காதல், சோகத்துடன் முடிவதுடன்ஆசாபாசங்களும், நம்பிக்கைகளும், துரோகங்களும், போராட்டங்களும் நிறைந்த அவர்களது வாழ்வின் யதார்த்தமான, மிகைப்படுத்தாத சித்தரிப்புகள் நெஞ்சை உருக்குவதாகவும், … Continue reading

படத்தொகுப்பு | Tagged | பின்னூட்டமொன்றை இடுக

கடல்புரத்தில் 1

This gallery contains 9 photos.

தலித்தியம்’, ‘பெண்ணியம்’ ஆகியவற்றை அவர்கள்தான் அசலாக எழுதமுடியும் என்பதற்குச் சவாலாக, வண்ணநிலவன் இந்த நாவலில் பரதவர் வாழ்க்கையை அவரே அனுபவித்தது போல, கூடுவிட்டுக் கூடுபாயும் சித்தர் போல அவரே மானசீகமாய் பரதவராக வாழ்ந்து வாசகர்க்கும் அந்த அனுபவத்தை ஏற்படுத்துவதில் வெற்றி கண்டிருக்கிறார். நாவலின் அடிநாதம் அன்புதான். ‘மனிதர்களுக்கு அன்பு என்கிற பெரிய வஸ்து அளிக்கப்பட்டிருக்கிறது. மனிதனை … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , | 2 பின்னூட்டங்கள்