Category Archives: வண்ணநிலவன் கதைகள்

எழுத்துக் கலை – ஏமாற்றும் எளிமை

This gallery contains 1 photo.

விமலாதித்த மாமல்லன் http://www.maamallan.com/2010/10/blog-post_12.html அழியாச் சுடர்கள்: எஸ்தர் – வண்ண நிலவன் மிகச்சில கோடுகளில் பாத்திரங்களின் மனங்களை உயிர்ப்பிக்கும் கலைஞன் வண்ணநிலவன். பொஸ்தகங்களில் இருந்தல்ல வாழ்க்கையில் இருந்து இலக்கியம் படைத்தவன். வாழ்க்கை எவ்வளவு அழகு அல்லது அவலம் என்பதை பாதாளக்கரண்டியால் சல்லிசாக தேடிக்கொடுத்தவன். தொட்டியில் வாளியைத் துழாவும் மொக்கை இலக்கியங்களுக்கும் அசல் இலக்கியத்திற்கும் வித்தியாசம் துல்லியப்பட … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , | 2 பின்னூட்டங்கள்

கம்பாநதி 6,7

This gallery contains 8 photos.

வண்ணநிலவன் கம்பாநதி நாவலில் பாப்பையாவும் கோமதியும் இண்டர்வியூவுக்குப் போய்விட்டு மழை விட்ட மாலையில் நயினார்குளத்துக் கலுங்கில் கால்களைத் தொங்கப்போட்டபடி பேசிக்கொண்டிருக்கும் அந்த எட்டுப்பக்கங்கள் தமிழ் இலக்கியத்தின் உச்சமான பக்கங்கள். காதல்வயப்படுதல் என்கிறார்களே அது இதுதான். வெண்ணிற இரவுகள் படித்துவிட்டுத் தூக்கம் பிடிக்காமல் விடிய விடியத் தெருக்களில் சுற்றித் சொந்தமுமில்லை. என்றாலும் அழியும் காடுகளைப்பார்த்து ஏங்கி அழும் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , | 2 பின்னூட்டங்கள்

கடல்புரத்தில் 3

This gallery contains 15 photos.

வண்ணநிலவன் வண்ணநிலவனின் ‘கடல்புரத்தில்’ என்னை அதிகம் ஈர்த்தற்கு காரணம் வாசித்து முடித்ததும் எல்லா மனிதர்களின் மீதும் அன்பு பெருகியது. கடல்புரத்தின் ஈரத்தை தன் எழுத்தில் பாய்ச்சி வண்ணநிலவன் நம் நெஞ்சிலும் அன்பை பெருகச்செய்கிறார். இந்நாவலில் வரும் பெரும்பாலான கதாபாத்திரங்கள் கொச்சையாகப் பேசினாலும், அவர்கள் இதயங்களில் அன்பு  கசிந்து கொண்டேதானிருக்கிறது. இவ்வளவு அன்பான மனிதர்களைக் காசு வாங்கிக்கொண்டு … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , | 3 பின்னூட்டங்கள்

காலம் 2

This gallery contains 1 photo.

வண்ணநிலவன் சப் கோர்ட்டுக்கும் செசன்ஸ் கோர்ட்டுக்கும் நடுவே ஏராளமான வேப்பமரங்கள் நின்றிருந்தன. எல்லா கோர்ட் கட்டிடங்களுமே பிரிட்டீஷார் காலத்தில் கட்டப்பட்டவைதான். செசன்ஸ் கோர்ட்டின் வடபுறம் அடுத்தடுத்து டிஸ்டிரிக்ட் கோர்ட் ஆபீசும், அமீனா ஆபீசும் இருந்தன. காப்பியிஸ்ட் ஆபீஸ் குறிச்சி போகிற ரோட்டோரத்தில் இருந்தது. ரோட்டுக்குக் கீழே தாமிரபரணி ஓடியது. காப்பியிஸ்ட் ஆபீஸ் வாசலில் இருந்து பார்த்தால் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

காட்டிலிருந்த ஒருவன்

This gallery contains 8 photos.

எனது சிறுகதை, நாவல்களில் பல்வேறுவிதமான நடை, உருவ சோதனைகளைச் செய்து பார்த்திருக்கிறேன். இதற்குக் க.நா.சு. தான் காரணம். வறட்சியைப் பற்றிய சிறுகதைகள்தான் எஸ்தரும், மிருகமும். ஆனால், இரண்டிலும் வித்தியாசமான மொழிநடை, உருவங்களைக் கையாண்டிருக்கிறேன். பாம்பும் பிடாரனும் போன்ற சில சிறுகதைகள் வித்தியாசமான நடையில் எழுதப்பட்ட சிறுகதைகள்…………….வண்ணநிலவன் எஸ் ஐ சுல்தான்

படத்தொகுப்பு | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக

கம்பா நதியில் ரெயினீஸ் அய்யர் தெரு

This gallery contains 1 photo.

from: ramjiyahoo yahooramji@gmail.com 01 ஆகஸ்ட், 2011 to : ram krishnan வண்ண நிலவன்- கம்பா நதியில் ரெயினீஸ் அய்யர் தெரு அன்புள்ள எஸ்ரா விற்கு உங்கள் அன்பு வாசகன் ராம்ஜி யாஹூ எழுத விரும்புவது. வீட்டிற்கு வந்து கம்பா நதி புத்தகம் எடுத்துப் பார்த்தேன். கிழக்கு பதிப்பகம் புத்தகத்தில், பக்கம் 94 அத்தியாயம் 15இல் இந்த வரி வருகிறது. அதற்கு முதல் நாள்தான் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

ரெயினீஸ் ஐயர் தெரு 3

This gallery contains 8 photos.

வண்ணநிலவன்  மூன்றாவது வீட்டிலிருக்கும் இருதயத்து டீச்சரின் மாணவி அற்புதமேரிக்கு டீச்சர் தன்னிடம் லீவு லெட்டர் கொடுத்து பள்ளியில் கொடுக்கச் சொல்லி விட்டார்களென்று ஒரே பெருமை. ஹென்றி மதுர நாயகத்தின் மகள் அவள். அவள் அண்ணன் சாம்ஸனுக்கு பிசாசு பிடித்திருக்கிறதென்று பேசிக் கொள்கிறார்கள். அவன் தன் எதிர்வீட்டு அன்னமேரி டீச்சர் வீட்டுக்குள் அம்மணமாக உடை மாற்றும் போதெல்லாம் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக