Category Archives: வண்ணநிலவன் கதைகள் குறித்து

அன்பின் சுடர் மின்னும் கலங்கரை விளக்கம்

This gallery contains 1 photo.

முனைவர் ப. சரவணன் http://www.vadakkuvaasal.com/component/content/article/437.html வண்ணநிலவனின் கடல்புரத்தில் மகத்தான புனைவுகள்:  கடலும் கடல் சார்ந்த வாழ்வும் நெய்தல் திணைக்குரியது.  நெய்தலில் வாழும் பெண்களுக்கு மணலும் ஆண்களுக்குக் கடலும் நிலப்பரப்பாக, வாழ்க்கை வெளியாக அமைகின்றன. கடற்கரையைத் தொட்டுச் செல்லும் கடலின் அலைக்கரங்கள் மணலுக்கும் கடலுக்குமான மக்களின் ஊடாட்டத்தைக் காட்சிப்படுத்துகின்றன. இந்த ஊடாட்டம் அன்பால் நிலைபெறுவதாக வண்ணநிலவனின் ‘கடல்புரத்தில்’ நாவல் … Continue reading

Gallery | Tagged , , , , | 3 பின்னூட்டங்கள்

எழுத்துக் கலை – ஏமாற்றும் எளிமை

This gallery contains 1 photo.

விமலாதித்த மாமல்லன் http://www.maamallan.com/2010/10/blog-post_12.html அழியாச் சுடர்கள்: எஸ்தர் – வண்ண நிலவன் மிகச்சில கோடுகளில் பாத்திரங்களின் மனங்களை உயிர்ப்பிக்கும் கலைஞன் வண்ணநிலவன். பொஸ்தகங்களில் இருந்தல்ல வாழ்க்கையில் இருந்து இலக்கியம் படைத்தவன். வாழ்க்கை எவ்வளவு அழகு அல்லது அவலம் என்பதை பாதாளக்கரண்டியால் சல்லிசாக தேடிக்கொடுத்தவன். தொட்டியில் வாளியைத் துழாவும் மொக்கை இலக்கியங்களுக்கும் அசல் இலக்கியத்திற்கும் வித்தியாசம் துல்லியப்பட … Continue reading

Gallery | Tagged , , , | 2 பின்னூட்டங்கள்

வெளியிலிருந்த பார்த்த ஆச்சரியம்: வண்ணநிலவனின் கடல்புரத்தில்

This gallery contains 1 photo.

அ.ராமசாமி http://ramasamywritings.blogspot.com/2012/01/blog-post_13.html தமிழ்ச் சிறுகதை தோன்றிய பத்தாண்டுகளிலேயே நவீன சிறுகதையாக மாறி விட்டது. ஆனால் தமிழ் நாவல் தன்னை நவீனமாக்கிக் கொள்ள எடுத்துக் கொண்ட காலம் முக்கால் நூற்றாண்டு என்பது நாவல்  வரலாற்றில் சொல்லப்பட வேண்டிய உண்மை. தொடர் நிகழ்வுகளை அடுக்கி நீண்ட வரலாற்றைச் சொல்ல உரைநடையை வெளிப்பாட்டுக் கருவியாக  மாற்றிக் கொண்ட போதிலும், காவியபாணியும் புராணிகத் … Continue reading

Gallery | Tagged , , , , | 2 பின்னூட்டங்கள்

வண்ணநிலவனுடன் கடல்புரத்தில்

This gallery contains 2 photos.

  சித்திரவீதிக்காரன் http://maduraivaasagan.wordpress.com/2011/12/15/ டிசம்பர் பதினைந்தாம் தேதி பிறந்தநாள் காணும் வண்ணநிலவன் அவர்கள் பல்லாண்டு மகிழ்வோடு வாழ மதுரையையும், தமிழையும் வேண்டுகிறேன். உயிருக்கு உலைவைக்கும் அணுஉலைக்கெதிராக போராடி வரும் கடல்புரத்து மக்களையும், போராட்டக் குழுவினரையும் வணங்கி இப்பதிவைத் தொடங்குகிறேன்.   வண்ணநிலவனின் கடல்புரத்தில் தமிழின் சிறந்த நாவல்களுள் ஒன்று. அதைக் குறித்த சா.கந்தசாமியின் பகிர்வைப் பார்ப்போம். கடல்புரத்தில், பரபரப்பூட்டும் … Continue reading

Gallery | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

கம்பா நதியில் ரெயினீஸ் அய்யர் தெரு

This gallery contains 1 photo.

from: ramjiyahoo yahooramji@gmail.com 01 ஆகஸ்ட், 2011 to : ram krishnan வண்ண நிலவன்- கம்பா நதியில் ரெயினீஸ் அய்யர் தெரு அன்புள்ள எஸ்ரா விற்கு உங்கள் அன்பு வாசகன் ராம்ஜி யாஹூ எழுத விரும்புவது. வீட்டிற்கு வந்து கம்பா நதி புத்தகம் எடுத்துப் பார்த்தேன். கிழக்கு பதிப்பகம் புத்தகத்தில், பக்கம் 94 அத்தியாயம் 15இல் இந்த வரி வருகிறது. அதற்கு முதல் நாள்தான் … Continue reading

Gallery | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

ரெயினீஸ் ஐயர் தெரு 2A

This gallery contains 10 photos.

சம்பிரதாயமான கதைகளைப் போல திருப்பங்கள் நிறைந்த சம்பவங்கள் எவையுமில்லை இந்நாவலில். ஒவ்வொரு வீட்டிலும் வசிக்கும் மனிதர்களின் இயல்புகளும், எதிர்பார்ப்புகளும், ஆசைகளும் எளிய மொழியில் சித்தரிக்கப்படுகின்றன. அம்மாவை இழந்து பெரியம்மா வீட்டில் வாழும் டாரதிக்கு அவளது எபன் அண்ணன் மேல் எழும் இனந்தெரியாத நேசமும், போன வாரம் வரை இல்லாமலிருந்து, இப்போது தாயைப் பிரிந்து தன்னந்தனியே இரை … Continue reading

Gallery | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மிருகம்

This gallery contains 2 photos.

வண்ணநிலவன் நார்ப் பெட்டியில் கொஞ்சம் சுள்ளி விறகுகளைத் தவிர வேறே ஒன்றுமில்லை. ஆனாலும் கூட பெட்டி கனமாக இருந்தது. பெட்டியை இறக்கிக் கீழே வைத்துவிட்டு, ஓரமாக நின்றிருந்த குத்துக்கல்லின் மேல் உட்கார்ந்தார் சிவனு நாடார். அவர் உடம்பிலிருந்து அடித்த நாற்றம் அவருக்கே குமட்டியது. பீடி குடித்தே ஏழெட்டு நாளாகி விட்டது. இன்னமும் பீடி வாடை முகத்துக்குள் … Continue reading

Gallery | Tagged , , , , , | 1 பின்னூட்டம்