ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் முதலியவர்களின் எழுத்துக்கள் பற்றி

பவுத்த அய்யனார்
http://solvanam.com/?p=18248
செப்டம்பர் –  நவம்பர் 2010 ‘நேர்காணல்’ இதழில் வண்ணநிலவனுடன் பவுத்தர் அய்யனார் நடத்திய உரையாடலின் ஒரு பகுதி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய தமிழ் இலக்கிய உலகில் மிகத் தீவிரமாகச் செயல்பட்டுவரும் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் முதலியவர்களின் எழுத்துக்கள் பற்றி,
இருவருமே நிறைய எழுதி வருகின்றனர். இந்தத் தலைமுறை நான் லீனியர், பின் நவீனத்துவம் என்று பேசுகிறது. எஸ்.ராமகிருஷ்ணனும், ஜெயமோகனும் நான் ஏற்கெனவே குறிப்பிட்டது போல், க.நா.சு. கூறிய பரிசோதனை எழுத்து முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதை அறுபதுகளிலேயே நகுலன் செய்து பார்த்திருக்கிறார். அவரது ‘நினைவுப்பாதை’ தமிழின் மிக முக்கியமான நாவல். நேர்கோட்டில் சொல்லப்படாத சில சிறுகதைகளையும் நகுலன் எழுதிப் பார்த்திருக்கிறார். நகுலனுக்குப் பிறகு தமிழவனும் நேர்க் கோட்டில் சொல்லப்படாத நாவலை எழுதியுள்ளார். சுந்தர ராமசாமியின் ஜே.ஜே. சில குறிப்புகள் மிக வெற்றிகரமான, தமிழ் இலக்கியச் சூழலைப் பாதித்த முக்கியமான நாவல். இதுவும் மையம் அழிந்த எழுத்து வகையைச் சேர்ந்ததே. இந்த மரபைத்தான் தற்காலத்துக்கு ஏற்ப ஜெயமோகனும், எஸ். ராமகிருஷ்ணனும் செய்து வருகின்றனர்.
ஜெயமோகனின் ‘பின்தொடரும் நிழலின் குரல்’ மிக முக்கியமான நாவல். ஆனால், அவரது ‘விஷ்ணுபுரம்’ அலுப்பூட்டுகிறது. எஸ். ராமகிருஷ்ணன் ‘ஷங்கண்ணா’ என்ற பெயரில் பல அற்புதமான சிறுகதைகளை எழுதியுள்ளார். எஸ்.ராமகிருஷ்ணன் என்ற பெயரில் எழுதியுள்ள தற்காலச் சிறுகதைகளும் நன்றாக இருக்கின்றன. அவரது நாவல்கள் எதையும் என்னால் தொடர்ந்து வாசிக்க முடியவில்லை.
இருவருமே சினிமாத் துறையில் தொடர்ந்து செயல்பட முயற்சிக்கின்றனர். ஜெயமோகனை விட எஸ்.ராமகிருஷ்ணன் திரைப்படத் துறையில் அதிகமாகப் பங்கு பெறுகிறார். இருவரது திரைப்படப் பங்களிப்புகள் பற்றிப் பெரிதாகச் சொல்ல ஏதுமில்லை.
70கள் 80களில் குறைவாக எழுதுவதே நல்ல எழுத்து என்ற போக்கு இருந்தது. இப்போது ஒரு எழுத்தாளர் 10 நூல்களை ஒரே சமயத்தில் வெளியிடுகிறார்களே?
குறைவாக எழுதுவது நிறைய எழுதுவது என்பது ஒரு விஷயமே அல்ல. எழுதியவற்றில் கலாபூர்வமாக, இலக்கியபூர்வமாக எத்தனை தேறும் என்றுதான் பார்க்க வேண்டும். புதுமையான நடை, உருவ சோதனைகளில் எந்தளவுக்கு ஒரு ஆசிரியன் அல்லது கவிஞன் ஈடுபடுகிறான், அவற்றில் எத்தனை படைப்புகள் தேறுகின்றன, மொழியை அவனது படைப்புகள் எந்தளவுக்கு வளப்படுத்தியிருக்கின்றன என்பதையெல்லாம் தான் கவனத்தில் கொள்ளவேண்டும்.
நிறைய எழுதும்போது அழகுணர்ச்சி குன்றிப் போய், காலப்போக்கில் வறண்டுவிடும் ஆபத்து நிறைய உண்டு. 90 சதவீத எழுத்தாளர்களின் ஆரம்பகாலப் படைப்புகளில் உள்ள கலையுணர்வு, இறுக்கம், அழகு எல்லாம் போகப் போகக் காணாமல் போய்விடுகின்றன. வயதான காலத்தில் அவர்கள் எழுதும் எழுத்துக்களைப் படிக்கவே முடிவதில்லை. அந்தளவுக்கு வறட்டுத்தனமாகி விடுகிறது அவர்களுடைய எழுத்து. எனக்குத் தெரிந்தவரை மிகக் குறைவாக எழுதியதால் மௌனியின் சிறுகதைகள் அதன் அழியா இளமையுடன் இருக்கின்றன. இறுதி வரை தன்னைச் சட்டை உரித்துக் கொண்டு, வறண்டு போகாமலிருந்த ஒரே எழுத்தாளர் சுந்தர ராமசாமிதான். பெரும்பாலான, எழுதிய, எழுதிக் கொண்டிருக்கிற எழுத்தாளர்களின் எழுத்துக்களில் கிழடு தட்டிவிட்டது என்பதே உண்மை.
காவேரிக்கரை எழுத்தாளர்கள், தாமிரபரணிக் கதை எழுத்தாளர்கள் முக்கியப் படைப்புக்களைத் தமிழுக்குத் தந்துள்ளார்கள். அவற்றுக்கும் நல்ல எழுத்துக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா?
ஆற்று நாகரீகத்துக்கும் எழுத்துக்கும் பெரிய சம்பந்தம் இருப்பதாகத் தெரியவில்லை. பாரதி பிறந்த எட்டயபுரம், கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணனின் இடைசெவல் போன்ற ஊர்கள் வறண்ட கரிசல் பூமிதான். இந்த ஊர்களிலிருந்து இவர்கள் எழுதி பல படைப்புகளைத் தமிழில் தரவில்லையா?
நதிக்கரை என்பதைவிடச் சூழல்தான் மிக முக்கியம் என்று தோன்றகிறது.
முழுக்கட்டுரையையும் படிக்க: http://solvanam.com/?p=18248
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், வண்ணநிலவன், வண்ணநிலவன் நேர்காணல் and tagged , , , , , . Bookmark the permalink.

2 Responses to ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் முதலியவர்களின் எழுத்துக்கள் பற்றி

 1. ramji yahoo (@ramjiyahoo) சொல்கிறார்:

  இருவரது திரைப்படப் பங்களிப்புகள் பற்றிப் பெரிதாகச் சொல்ல ஏதுமில்லை.

  மிகவும் சரி.
  சுஜாதாவாலும் பாலகுமரனாலும் இயக்குனர்கள், நடிகர்கள் கருத்தை சிறிது மாற்ற முடிந்தது. அதுவும் ரோஜா, நினைத்தாலே இனிக்கும், ஜென்டில்மேன், பாட்சா, வல்லவன்/மன்மதன் படங்களில் இவர்கள் ராஜ்ஜியம் தான்.
  வரும் காலங்களில், ஜெமோ, எஸ் ரா இருவரும் கூட ‘ஆமாம் சார்’ நிலையை விட்டு மேலே வருவார்கள் என நம்புவோமாக.

 2. வயதான காலத்தில் அவர்கள் எழுதும் எழுத்துக்களைப் படிக்கவே முடிவதில்லை. அந்தளவுக்கு வறட்டுத்தனமாகி விடுகிறது அவர்களுடைய எழுத்து. எனக்குத் தெரிந்தவரை மிகக் குறைவாக எழுதியதால் மௌனியின் சிறுகதைகள் அதன் அழியா இளமையுடன் இருக்கின்றன.
  -வண்ணநிலவன்.
  வண்ணநிலவனின் எழுத்துக்களும் அழியா இளமையுடன்தான் இருக்கின்றன. பகிர்விற்கு நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s