கம்பா நதியில் ரெயினீஸ் அய்யர் தெரு

from: ramjiyahoo yahooramji@gmail.com

01 ஆகஸ்ட், 2011

to : ram krishnan

வண்ண நிலவன்- கம்பா நதியில் ரெயினீஸ் அய்யர் தெரு

அன்புள்ள எஸ்ரா விற்கு
உங்கள் அன்பு வாசகன் ராம்ஜி யாஹூ எழுத விரும்புவது.
வீட்டிற்கு வந்து கம்பா நதி புத்தகம் எடுத்துப் பார்த்தேன்.
கிழக்கு பதிப்பகம் புத்தகத்தில், பக்கம் 94 அத்தியாயம் 15இல் இந்த வரி வருகிறது.
அதற்கு முதல் நாள்தான் கிறிஸ்துமஸ் அன்று ரெய்னீஸ் அய்யர் தெருவில் தியோப்லஸ் வீட்டிற்கு பரமனும் பாப்பையாவும் போய் இருந்தார்கள்…..
பக்கம் 95 இல் வரும் வரி.
அப்போது தியோப்ப்லஸ் அப்பா சமாதானபுரம் கோவிலில்தான் அய்யராக இருந்தார். வீடு கூட இந்த ரெய்நேச்ஸ் அய்யார் தெருவில் இல்லை.
……
ரெய்னீஸ் அய்யர் தெரு வீடு அந்த வீட்டை விடப் பெரிய வீடுதான். வீட்டின் முற்றத்தில் சிறிது இடம் கூடக் கிடந்தது. டாரதி அந்த இடத்தில் ஏதோ தனக்கு விருப்பமான பூஞ்செடிகளைப் போட்டு இருந்தாள்.
…..
ஆனால் ரெயினீஸ் அய்யர் தெரு வீட்டில் முன் வராண்டா ஒன்று ஏற்பட்டு விட்டது.
பக்கம் 99 இல் – ஆனால், ரெய்னீஸ் அய்யர் தெருவிலும்,அடைக்கலாபுரத்தில் உள்ள கிறிஸ்துவர்களும் கூட ஆற்றுக்கு குளிக்கப் போவதில்லை.
பக்கம் 104 இல், மனசுக்குக் கஷ்டமாக இருக்கும் பொழுதெல்லாம் ரெயிநேச்ஸ் அய்யார் தெருவிற்கு வந்து விடுகிறான்.
 நீங்கள் சற்று உறுதியாகவே சொன்னீர்கள் ரெய்னீஸ் அய்யர் தெரு என்ற பெயர்/குறிப்பு கம்பாநதி நாவலில் வர வில்லை என்று.
வண்ண நிலவன் அவர்கள் சந்தேகமாக சொன்னார்கள்.
நான் அறிய விரும்புவது:
ஒரு நாவலில் தன் முந்தைய நாவல்/படைப்பு குறித்து எழுதும் புது முயற்சி, இதுதான் தமிழில் முதலா அல்லது இது போல பிற எழுத்தாளர்களும் தங்களின் ஒரு படைப்பில் வேறு படைப்பில் வந்த பெயர், இடம்,குறிப்பை பயன் படுத்தி உள்ளனரா.
எனக்கு இந்த புது பாணி பிடித்து இருந்தது.
எனக்கு இதைப் படித்த உடனே ஞாபகம் வந்தது நீங்கள் பங்கேற்ற பாபா திரைப்படம்.
அதில் ஒரு காட்சியில் முந்தைய படமான (படையப்பா)நீலாம்பரி தோன்றும் படி ஒரு காட்சி இருக்கும்.
அங்கே நீலாம்பரி இங்கே டாரதி.
 உங்கள் பதில் அறிய ஆவலாக உள்ளேன்
அன்புடன்……..ராம்ஜி யாஹூ...சென்னை
ram krishnan  to ராம்ஜி
அன்பு ராம்ஜி
 இவ்வளவு தீவிரமான இலக்கிய வாசகரை இப்போது தான் பார்க்கிறேன், எவ்வளவு மெனக்கெட்டு உள்ளீர்கள் என்பது வியப்பாக இருக்கிறது,
மற்றபடி உங்கள் கேள்விகளுக்கான பதில் எனக்குத் தெரியவில்லை,
 இந்த இலக்கிய கண்டுபிடிப்பின் முழு உரிமையும் உங்களையே சேரும்,
 மிக்க அன்புடன்
எஸ்ரா
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கம்பாநதி - தொடர், ரெயினீஸ் ஐயர் தெரு - தொடர், வண்ணநிலவன், வண்ணநிலவன் கதைகள், வண்ணநிலவன் கதைகள் குறித்து and tagged , , , , , , . Bookmark the permalink.

1 Response to கம்பா நதியில் ரெயினீஸ் அய்யர் தெரு

  1. டிசம்பர் பதினைந்தாம் தேதி பிறந்தநாள் காணும் வண்ணநிலவன் அவர்கள் பல்லாண்டு காலம் நலமோடும், மகிழ்வோடும் வாழ மதுரையையும், தமிழையும் வேண்டுகிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s