சாரல் விருது 2012 அழைப்பிதழ்

தன்னை ஸ்தாபித்துக் கொள்ளும் கடுகளவு முனைப்புமின்றி,
மொழிக்கு வளம் சேர்க்கும் பரிட்ஷார்த்த முயற்சிகளோடு,
நெல்லை நாட்டு பாஷையின் சுகந்தத்தை கமழவிட்டபடி,
புது வித புவிப்பரப்பில், ஞானியின் தேசாந்திரம் போல்
தூரங்களை கடந்துகொண்டிருப்பவர் வண்ணநிலவன். …………………ரவிசுப்ரமணியன்

..

படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், வண்ணநிலவன், வண்ணநிலவன் குறித்து and tagged , , , , . Bookmark the permalink.

2 Responses to சாரல் விருது 2012 அழைப்பிதழ்

 1. மழை சொல்கிறார்:

  தன்னை ஸ்தாபித்துக் கொள்ளும் கடுகளவு முனைப்புமின்றி,
  மொழிக்கு வளம் சேர்க்கும் பரிட்ஷார்த்த முயற்சிகளோடு,
  நெல்லை நாட்டு பாஷையின் சுகந்தத்தை கமழவிட்டபடி,
  புது வித புவிப்பரப்பில், ஞானியின் தேசாந்திரம் போல்
  தூரங்களை கடந்துகொண்டிருப்பவர் வண்ணநிலவன்///

  மெய்சிலிர்க்கிறது உங்கள் எழுத்து நடை:)

 2. சுந்தர்ஜி சொல்கிறார்:

  என் இருபது வயதுகளில் இந்த இருவரின் கையைப் பிடித்துத்தான் நடை பழகியிருக்கிறேன்.

  என் பல கவிதைகளின் முதல் வரியையல்ல வார்த்தையைக் கூட எழுதத் தயக்கமூட்டியது இவர்களின் மொத்த எழுத்துக்கள்தான்.

  பல நாட்களின் பசியையும் பல இரவுகளின் உறக்கத்தையும் மறக்க வைத்த கதைகளையும் கவிதைகளையும் சொல்ல யாரையும் முன்மாதிரியாகக் கொள்ளாத ஓர் பாணியை தனக்கென தனித்தனியே உருவாக்கிக் கொண்டவர்கள்.

  வாழ்வின் பொருளையும் அன்பின் கசிவையும் ஓயாத கடல் அலை போல வீசி வீசி என்னைப் போன்ற கரையில் நிற்கும் வாசகனை உருக்கி வார்த்ததும் இவர்களின் ஆகிருதிகள்தான்.

  விருதுகளைக் கடந்த எழுத்து இவர்களுடையது. இவர்கள் இதுவரை எழுதியதன் மூலமாகவே இவர்களுக்குள் இருக்கும் எழுதாத பகுதிகளிலும் வெளிச்சமிட்டுக் காட்டிய மேன்மையான கலைஞர்கள்.

  இவ்ர்கள் என் எழுத்துக்கு ஆதர்சம் என்று சொல்லிக் கொள்வதில் நான் கர்வமும் பெருமையும் கொள்கிறேன்.

  சாரல் விருது இவர்கள் மேல் தூவப்படுகிறது நாளை (07-01-2012) மாலை 6 மணிக்கு சென்னை தேவநேயப் பாவாணர் நூலக அரங்கத்தில்.

  நேற்றின் வண்ணங்களும் நாளையின் சுகந்தங்களும் நிரம்பிய மலர்கள் உங்கள் இருவரின் கையெட்டும் தொலைவிலேயே என்றும் மலரட்டும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s