ஒன்றை மாதிரி ஒன்றை நான் எழுதுவதே இல்லை. என் கதைகளைப் பார்த்தால் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு முகத்தோடு இருக்கும். இதற்கு மத்தியிலும் வண்ணநிலவன் பார்க்கும் பார்வை, இது வண்ணநிலவனின் கோணம் என்பது இருக்கும். விதம் விதமாய், நவம்நவமாய் நான் சொல்ல நினைப்பதை வேண்டுமானால் என் தனித்துவம் என்று சொல்லலாம்