காலம் – தொடர்

இந்த வண்ணநிலவனின் அருமையான கதையில் ஏராளமான எழுத்துப் பிழைகளை வாசகர்கள் காணலாம். என்னால் முடிந்தவரையிலும் சரிசெய்திருக்கிறேன், மீதியையும் சரிசெய்ய வழி தெரிந்தவர்கள் தயவுசெய்து திருத்தித் தரவும், அல்லது திருத்த வழிகாட்டவும்…
(எஸ் ஐ சுல்தான்)
வண்ணநிலவன்

 

அன்றுதான் எல்லா கோர்ட்களும் திறந்தன. ஓரு மாதக் கோடை விடுமுறையும் எப்படிக் கழிந்ததென்பúத் தெரியவில்லை நெல்லையப்பனுக்கு. இரண்டு வெகேஷன் கோர்ட்களிலும் நாலைந்து பெட்டிஷன்கள் தாக்கல் செய்ய வேண்டியிருந்தது. அதனால் லீவு மாதிரியே தெரியவில்லை. செசன்ஸ் கோர்ட், சப் கோர்ட், முன்சீப் கோர்ட் உள்பட எல்லாக் கோர்ட்களிலும் நல்ல கூட்டம். கோடை விடுமுறைக்குப் பின்வரும் முதல் வேலை நாளாதலால் எல்லாக் கோர்ட்களும் சுறுசுறுப்பாக இயங்கின.
காலை பதினோரு மணி இருக்கும். குமாஸ்தாக்கள் சங்கத்துக்குப் பக்கத்திலிருந்த மணி ஐயர் கேண்டீனில் டபரா டம்ளர்களின் சத்தம். கூடவே மணி ஐயரின் குரல். குமாஸ்தாக்கள் சங்க வராண்டாவிலும் சங்கத்தின் பின்புறமுள்ள ஃட்டுச் சாய்ப்பிலும் பழைய சைக்கிள் வண்டிகள் நிறைந்துவிட்டன. நெல்லையப்பனும் அவனுடைய சைக்கிளை சங்கத்தில்தான் விட்டிருந்தான். பெரிய குமாஸ்தா சிதம்பரம்பிள்ளை மட்டும் எப்போதும் அவருடைய சைக்கிளை செசன்ஸ் கோர்ட் சிரஸ்தார் ரூம் முன்னாலிருக்கிற வராந்தா சுவரோரமாகத்தான் நிறுத்துவார். வராந்தாவில் கால்வாசி இடத்தை கேஸ் கட்டுகள் ஆக்ரமித்திருக்கும். மகாலிங்கத்துக்கு ஏதாவது வேலை கொடுத்திருப்பார். அவனுக்குக் காது கேளாது. டைப் அடித்த காகிதங்களைப் பக்கவாரியாக அடுக்கிப் பின்போட்டுக் கொண்டிருப்பான். அல்லது கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டிய தாஸ்தாவேஜ்களைத் தைத்துக்கொண்டிருப்பான்.
பார் அஸோஷியேஷனை ஒட்டியிருந்த கார் ஷெட்டில் கார்கள் நிறைந்துவிட்டன. ஷெட்டுக்கு முன்னால் நின்றிருந்த இரட்டை வேப்ப மரங்களின் நிழல்களிலும் வக்கீல்களின் கார்கள் நின்றிருந்தன. முன்சீப் கோர்ட்டுக்குப் போகிற இரண்டு சிமிட்டிப் பாதைகளில் ஒன்று மணி ஐயர் கேண்டீனுக்குப் பின்புமாகத்தான் செல்கிறது. அந்த ஓடுக்கமான நீண்ட பாதையில் நாலைந்து பேர் போய்க்கொண்டிருந்தார்கள். ஓருபக்கம் நாவல்பழ மரம் நின்றுகொண்டிருந்தது. இன்னொருபும் உயரமான மருதமரம் நின்றிருந்தது.
செசன்ஸ் கோர்ட்டை சிதம்பரம் பிள்ளை பார்த்துக்கொண்டார். முன்சீப் கோர்ட்டை நெல்லையப்பன் கவனித்துக்கொண்டான். சப் கோர்ட்டில் ஜ÷னியர் நவநீதகிருஷ்ணன் இருந்தார். முன்சீப் கோர்ட்டை முடித்துவிட்டு சீனியர் பாலையா பாருக்குப் (பார் அஸோஷியேஷன்) போய்விட்டார். அவர் பின்னாலேயே வந்த நெல்லையப்பன் மணிஐயர் கேண்டீனுக்குள் நுழைந்தான். கேண்டீனில் கீழே மணல் பரப்பியிருந்தது. அந்த மணலைப் பார்த்ததுமே சந்தோஷமாக இருந்தது. தோதாக இடம் பார்த்து உட்காரப் போனவனுக்கு வடப்புத்துப் பெஞ்சில் தென்பாண்டி பத்திரிகை நிருபர் அவுடையப்பனையும், பாலகிருஷ்ணனையும் பார்த்தும் அச்சரியம் தாளவில்லை. அவுடையப்பனுக்கு முன்னால் பெஞ்சில் கனமான டைரி இருந்தது. பாலகிருஷ்ணனின் மடியில் ஐதோ புத்தகம்.
இங்கே வா, நெல்லையப்பா…என்றார் அவுடையப்பன். பாலகிருஷ்ணன் அவனைப் பார்த்துச் சிரித்தார். ஷோ அண்ட் கோ டைரியையும் கேஸ் கட்டுகளையும் பெஞ்சில் ஓரு ஃரமாக வைத்துவிட்டு அவுடையப்பன் பக்கத்தில் உட்கார்ந்தான்.
கோர்ட்டு தொந்தாச்சு… இனிமேல் அண்ணாச்சிய நெதம் பாக்கலாம்…என்று அவுடையப்பனைப் பார்த்துச் சொல்லிலி விட்டு, பாலகிருஷ்ணனிடம், “நீங்க எங்கே இந்தப் பக்கம்?…” என்றான்.
பஸ் ஸ்டாண்டிலே காரைப் பார்த்தேன். அப்படியே ரெண்டுபேரும் பேசிக்கிட்டே வந்து சேந்துட்டோம்என்றார் பாலகிருஷ்ணன்.
இந்த வருஷம் கோர்ட் தொறக்கிதுக்குள்ளே எப்படியாவது வேற வேலைக்குப் போயிருவேன். மெட்ராஸ் போகக் போறேன்னியே? என்ன அச்சு? பழைய குருடி கதவைத் தொறடிதானா?…” என்று கேட்டார் அவுடையப்பன். குளிர்ந்த காற்று வீசியது. செருப்பைக் கழற்றிவிட்டு கால்களை மணலில் பதியும்படியாக வைத்துக்கொண்டான் நெல்லையப்பன்.
நாம நெனைக்கிதெல்லாம் எங்கே நடக்குது?…” என் அசுவாரஸ்யத்தோடுப் பேசினான்.
நமக்கு இந்த எருதான்னு தலையில எழுதியிருக்கு..என்றார் அவுடையப்பன்.
நீ வே ஐதாவது வேலைக்கி ட்ரை பண்ணினியா?…” என்று கேட்டார் பாலகிருஷ்ணண்.
இல்லை…
முயற்சியே பண்ணாமே அலுத்துக்கிட்டா எப்பிடி?…”
என்னத்தை அண்ணாச்சி முயற்சி பண்றது?…” என்று சிரித்துக்கொண்டே சொன்னான். மணிஐயர் அவர்கள் முன் வந்து நின்றார்.
காபியா, டீயா?” என்று இரண்டு பேரையும் பார்த்துக் கேட்டார் அவுடையப்பன்.
கொளத்து டீ நல்லா போடுவாரு… டீயே சொல்லுங்க…என்றார் நெல்லையப்பன்.
மூணு டீ…என்றார் அவுடையப்பன்.
மணிஐயர், “வேற ஐதாவது?” என்ôர். “டீ போதும் சாமிஎன்றார் அவுடையப்பன். “கொளத்து மூணு டீ போடு…என்றார் மணிஐயர் 
ஐன் உங்க வக்கீலய்யாகிட்டேயே சொல்லிலி ஐதாவது வேலைக்கு ஐற்பாடு பண்ணக்கூடாதா?” என்றார் பாலகிருஷ்ணன். “எம்ப்ளாய்மெண்ட்லே பதிஞ்சு வச்சிருக்கே இல்லே…என்று ஞாபகமாகக் கேட்டார்.
தெல்லாம் பதிஞ்சுதான் இருக்கு. வார்டு கவுன்சிலர் எலெக்ஷன்லே அய்யா நிக்கிறாங்க… எலெக்ஷன் முடியட்டும் பார்க்கலாம்னு சொல்லியிருக்கிôங்க…
எதை?…” என்று கேட்டுக்கொண்டே அவர்களுக்கு எதிரே வந்து உட்கார்ந்தாள் காப்பியிஸ்ட் அபீஸ் அலமேலு.
வாங்க மேடம்…என்ôன் நெல்லையப்பன். அலமேலுவும் அவனும் அறாவதுவரை ஓன்றாகப் படித்தவர்கள். அவுடையப்பனும் “வாங்கம்மா…என்றார்.
வக்கீலய்யா என்ன பண்ணப் போறார்னு சொல்லலையே?…” என்று ஞாபகப்படுத்தினாள் அலமேலு.
வேற ஓண்ணுமில்லை… என் வேலை விஷயமாகத்தான் பேசிக்கிட்டிருந்தோம்.
நீங்க என்ன சாப்பிடறீங்க?” என்று கேட்டார் அவுடையப்பன்.
 மணிஐயர் ஓரு காபி போடுங்க…என்று சொல்லிலிவிட்டு, அவுடையப்பனிடம், “இவர்கிட்டே எத்தனையோ தடவை முட்டிக்கிட்டேன் டைப்ரைட்டிங் படியுங்க, டைப்ரைட்டிங் படியுங்கன்னு… கேட்க மாட்டேங்கார். டைப்ரைட்டிங் முடிச்சிருந்தா இங்கே கோர்ட்லேயே மரத்தடியிலே உட்கார்ந்து பெட்டிஷன், பிராதுன்னு டைப் பண்ணிக் குடுத்துக்கிட்டு இருக்கலாம்என்றாள் அலமேலு.
 இப்போ என்ன வேலை இல்லாமேயா இருக்கேன்?… இன்னும் நல்ல வேலை பார்க்கலாமேன்னுதான்….
 அவங்க சொல்றதும் சரிதான். டைப்பாவது படிக்கலாம் இல்லே?” என்றார் பாலகிருஷ்ணன்.
 நீங்க என்னதான் சொன்னாலும் அதுஅதுக்குன்னு ஓரு நேரம், காலம்ன்னு ஓண்ணு இருக்கு. எல்லாத்துக்கும் மேலே தலையெழுத்துன்னு ஓண்ணு இருக்கு…என்று சொல்லிலிக்கொண்டே காபி, டீயைக் கொண்டு வந்து வைத்தார் மணிஐயர்.
 பில்ல என்கிட்டே குடுங்க…என்றாள் அலமேலு.
 இல்லை…இல்லை… நீங்க சும்மா இருங்க… பில்லை இங்கே தந்திருங்க….என்றார் அவுடையப்பன் அவசரத்தோடு.
 ரெண்டு பேருக்குமே பில் தர்றேன். ரெண்டு பேருமே காசு குடுத்திடுங்கோ… எதுக்கு வம்பு?…” என்றார் மணிஐயர் சிரித்துக்கொண்டே. அனால் கடைசியில் அலமேலுதான் “படக்கென்று அவரிடமிருந்து பில்லைப் பறித்துக்கொண்டாள். “பில் சண்டையிலே காபி குடிக்க மறந்திடாதீங்கோ. மொதல்ல காபி டபராவைக் காலிலி பண்ணுங்கோ. பில்லை அப்பும் பார்த்துக்கலாம்என்று சொல்லிக்கொண்டே உள்ளே போனார் மணிஐயர்.
 அந்தச் சூழ்நிலை எல்லோருக்குமே பிடித்திருந்தது. எல்லோருடைய மனதிலும் இனம்புரியாத உவகை பொங்கி வழிந்துகொண்டிருந்தது. அதற்கு முத்தாய்ப்பு வைக்கிற மாதிரி அவுடையப்பன், “மணிஐயர் கிளப்பிலே சாப்பிட்டா நம்ம வீட்டிலே சாப்பிடுகிற மாதிரி இருக்கு….என்றார்.
 காற்று, கடைக்குள் பரப்பியிருந்த மணலிலின் குளிர்ச்சி, காற்றில் சடசடக்கி கீற்றுக் கொட்டகை, மணிஐயருடைய, அலுமேலுவுடைய பிரியம், அவுடையப்பன் பாலகிருஷ்ணனுடைய அக்கறை எல்லாமே மனதுக்கு இதமாக இருந்தன. அங்கேயே வெகுநேரம் அவர்களோடு உட்கார்ந்திருக்கவேண்டும் போலிலிருந்தது நெல்லையப்பனுக்கு. அலமேலு காபி குடித்துவிட்டுச் சிறிது நேரம் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவனை நினைத்தால் பாவமாக இருந்தது. அவுடையப்பனும் பாலகிருஷ்ணனும் ஐதோ பேசிக்கொண்டிருந்தார்கள். குழந்தைசாமி வக்கீலாபீஸ் குமாஸ்தா வினாயகம்பிள்ளையும் இரண்டு கட்சிக்காரர்களும் வந்தார்கள். வினாயகம்பிள்ளை அவனைப் பார்த்துச் சிரித்தார். அவருடன் வந்த கட்சிக்காரர் பேசிக்கொண்டே இருந்தார். கேண்டீன் பின்பு வாசல் வழியாக முன்சீப் கோர்ட்டுக்குப் போகிற சிமிட்டிப் பாதை அள் நடமாட்டமே இல்லாமல் கிடந்தது. நாவல்பழமரம் காற்றில் லேசாக அடிக் கொண்டிருந்தது.
 அலமேலு பில்லுக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டு அவர்களிடம் வந்து “வரட்டுமா?” என்றாள். “எங்களுக்கு மட்டும் என்ன வேலை?… நாங்களும் புப்பட வேண்டியதுதான்என்று சொல்லிலிக்கொண்டே டைரியை எடுத்துக்கொண்டு எழுந்தார் அவுடையப்பன். நெல்லையப்பனும் கேஸ் கட்டுகளையும் டைரியையும் எடுத்துக்கொண்டான். கேண்டீனைவிட்டு வெளியே வந்ததும் அவுடையப்பன் நெல்லையப்பனிடம், “முனிசிபல் எலெக்ஷன் விஷயமா உங்க வக்கீலய்யாவை வந்து பார்க்கணும்என்றார்.
 வக்கீலய்யா ஓரு அப்பீல் விஷயமா இன்னைக்கிச் சாயந்திரம் மெட்ராஸ் போறாங்க. வாரதுக்கு ரெண்டு மூணு நாளாகும்…
 திரும்பி வந்ததும் சொல்லுஎன்றார்.
 அலமேலு அவர்களிடம் சொல்லிலிக்கொண்டு காப்பியிஸ்ட் அபீஸைப் பார்க்கப் புறப்பட்டாள். அவுடையப்பனும் பாலகிருஷ்ணனும் கலெக்டர் அபீஸ் பக்கம் போனார்கள். நெல்லையப்பன் சப்கோர்ட் கேஸ்களைப் பார்ப்பதற்காக சப்கோர்ட்டை நோக்கி நடந்தான்
தொடரும்…….
எஸ் ஐ சுல்தான்
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், காலம், வண்ணநிலவன், வண்ணநிலவன் கதைகள் and tagged , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s