வண்ணநிலவன் நேர்காணல் 3.

சந்திப்பு: பவுத்த அய்யனார்
முன் பகுதி:வண்ணநிலவன் நேர்காணல் 1.,வண்ணநிலவன் நேர்காணல் 2.
கிராமம் நல்லவர்களைக் கொண்டதாகவும், நகரம் கெட்டவர்களைக் கொண்டதாகவும் பொதுப்புத்தியில் உறைந்துள்ள கருத்து சரியானது தானா?
தவறு. நல்லவர் – கெட்டவர் என்பது கிராமம்,
நகரம், இனம், மொழி, ஜாதி, நாடு எவை சார்ந்தும்
இல்லை. முழுக்க முழுக்க நல்லவர் என்றோ,
கெட்டவர் என்றோ யாரும் இல்லை. இரண்டும்
கலந்த கலவைதான் மனிதர்கள்.
அன்பும் குரோதமும் வெறுப்பும் எல்லாம் கலந்த
உங்கள் எழுத்தில் அன்புக்கு மட்டும் அதிக
முக்கியம் வருகிறது. கிறித்துவ வாழ்க்கை
முறை உங்களுக்குள் பெரும் பாதிப்பை
ஏற்படுத்தியுள்ளதோ?
எனது மொழிநடையில் கிறிஸ்தவ வேதமான
பைபிளின் தாக்கம் ‘கடல்புரத்தில்’ நாவலிலும்,
‘எஸ்தர்’ போன்ற சிறு கதைகளிலும் உண்டு.
பாளையங்கோட்டையில் படித்த காலத்திலிருந்தே
பல கிறிஸ்தவ நண்பர்கள் எனக்குப் பழக்கம்.
குடும்ப வறுமை காரணமாக என் நண்பன் ரவியின்
குடும்பத்தில் அவர்கள் வீட்டுப் பிள்ளை போலவே
இருந்திருக்கிறேன்.
எனது கதைகள் அன்பைப் பற்றி மட்டும்
பேசவில்லை. பல்வேறுவிதமான மானுட
குணங்களையும் என்னால் இயன்றவரை படைப்பு
களில் கொண்டுவர முயற்சி செய்திருக்கிறேன்.
கடல்புரத்தில்’, ‘கம்பா நதிநாவல்களை 80களில்
நான் படித்தபோது இருந்த fressnessஐ இப்போதும்
அனுபவித்தேன். மேலும் அப்போது புரிபடாத
வாழ்வின் அபாயங்கள், கவனங்களை இப்போது என்
வாழ்வின் ஊடே உணர்கிறேன். அப்போதே எப்படி
வாழ்வின் உண்மைகளை உணர்ந்தீர்கள்?
ஏராளமான சிறுகதைகள், நாவல்களைப்
படித்ததுதான் காரணம். கல்கியின்
நாவல்களை என் பால்ய
காலத்தில் படித்தேன். அவரது
நாவல்களில் உள்ள
கதாபாத்திரங்களின்
குணச்சித்திரங்கள் இன்றும்
பசுமையாக அப்படியே
நினைவில் உள்ளன. இலக்கியத்
தின் பக்கம் வந்தால் புதுமைப்
பித்தனிடமும் இந்தத் திறமை
இருக்கிறது. ஜெயகாந்தனின் கதாபாத்திரங்கள்
தனித்துவமானவை. கு.ப.ரா.வின்
நூருன்னிஸா, ‘ஆற்றாமை’
கதைகளில் வருகிற மென்மை
யான உணர்வுகள் படிக்கும்
போது நம்மைத் தொற்றிக்
கொள்கின்றன.
கதைகளின் வழியாகவும்
உலகத்தைப் பார்க்கிறோம். நமது
நேரடி அனுபவங்களின்
மூலமாகவும் உலகத்தைப்
பார்க்கிறோம். புஸ்தகங்கள், நேரடி அனுபவங்கள்
இவைதான் நம்மைப் பட்டை தீட்டுகின்றன.
உலகத்தைப் புரிய வைக்கின்றன.
ஒரு சிறுகதை, ஒரு நாவல், ஒரு கவிதை
உங்களிடம் எப்படி உருவாகிறது? அதன் படிநிலை
(Process) பற்றி விளக்க முடியுமா?
ஏராளமான படைப்புகளைப் படித்துப் படித்து
மனம் ஒருவிதமான மொழிசார்ந்த தளத்தில்
பக்குவமாக இருக்கிறது. இதனுடன் நமது சொந்த
அனுபவங்கள் சேரும்போது படைப்பு வெளியா
கிறது என்று நினைக்கிறேன்.
என்னுடைய முதல் சிறுகதையான ‘மண்ணின்
மலர்கள்’ என்ற சிறுகதை, சாலையோர மரம் ஒன்று
வெட்டப்படுவதைப் பற்றியது. இது ஒரு உண்மைச்
சம்பவம். பாளையங்கோட்டையில் முருகன்குறிச்சி
பஸ் நிறுத்தத்தில் பலருக்கும் நிழல் தந்த மரத்தை
எதனாலோ வெட்டினார்கள். அது எனக்குக்
கஷ்டமாக இருந்தது. அந்த மனநிலையைத்தான்
சிறுகதையாக எழுதினேன்.
குலசேகரன்பட்டிணம், உடன்குடியில்
இருந்தபோது சில மீனவர்களைத் தெரியும்.
குலசேகரன்பட்டிணத்தில் அடிக்கடி கடற்கரைக்குச்
செல்வேன். குலசேகரப் பட்டிணத்தை விட்டு
பாளையங்கோட்டைக்கு வந்த பிறகு தினமலர்
நாளிதழில், திருச்செந்தூர் அருகே உள்ள
வீரபாண்டியன் பட்டிணத்தில் இயந்திரப்
படகுக்கா ரர்களுக்கும் ,
கட்டுமரத்துக்காரர்களுக்கும்
ஏற்பட்ட மீன்பிடிக்கும்
போட்டியில் கொலைகள்
விழுந்தன என்ற செய்தியைப்
படித்தேன். கடல்புரத்தில்
நாவல் எழுதத் தூண்டியது
அந்தச் சிறு செய்திதான்.
பிலோமி, வாத்தி, செபஸ்தி,
குரூஸ் மைக்கேல் என்று
கதாபாத்திரங்கள் தானாகவே
மனதில் உருவாகின.
ஒருமுறை திருநெல்
வேலியிலிருந்து பாணடிச்
சேரிக்குப் பஸ்ஸில் சென்று
கொண்டிருந்தேன். அப்போது
மாநிலமெங்கும் கடும் வறட்சி
நிலவியது. கிராம மக்கள்
குடும்பம்குடும்பமாக வேலை
தேடி ஊர் விட்டு ஊர் பெயர்ந்து
கொண்டிருந்தார்கள். இதுதான்
எஸ்தர், மிருகம் ஆகிய
சிறுகதைகளின் பொறி.
‘காலம்’ நாவல் எனது வக்கீல் குமாஸ்தா,
கோர்ட் வாழ்க்கை அனுபவங்களைப் பற்றியது.
எழுதுவதற்கு ஏதோ ஒரு பொறி தேவைப்படுகிறது.
அதை ஊதி ஊதிப் பெரிதாக்குகிறான் எழுத்தாளன்.
அன்பும், மென்மையும், தீவிரமும் கொண்ட
எழுத்துக்களை எழுதிய நீங்கள் துர்வாசர்ஆகி
தார்மீகக் கோபம் கொண்ட எழுத்துக்களை எழுதத்
தூண்டியது எது?
துக்ளக்கில் ஆரம்ப காலத்திய சினிமா
விமர்சனங்களை இயக்குனர் மகேந்திரன் எழுதி
வந்தார். நான் துக்ளக்கில் சேர்ந்த பிறகு சினிமா
விமர்சனங்களை எழுதும் வாய்ப்பை எடிட்டர்
என்னிடம் கொடுத்தார். என்னுடைய மயான
காண்டம், யுகதர்மம் போன்ற ஆரம்ப காலத்துச்
சிறுகதைகளில் கிண்டலும், கோபமும் உண்டு.
அந்தக் கிண்டல், கோபத்தை சினிமா விமர்சனப்
பகுதியில் காட்டினேன்.
பிறகு நான் தனிக்கட்டுரைகளை எழுதலாம்
என்று ஆசிரியர் கூறினார். அப்போது எடிட்டர்
எனக்கு ‘துர்வாசர்’ என்ற பெயரை வைத்தார்.
துர்வாசர் என்ற பெயரில் நான் துக்ளக்கில் எழுதிய
கட்டுரைகள் வாசகர்கள் மத்தியில் நல்ல
வரவேற்பைப் பெற்றன.
80களில் எனக்கு வெங்கட்சாமிநாதனின்
பாலையும் வாழையும்’, ‘கலை வாழ்க்கை
அனுபவம் வெளிப்பாடுமுதலிய நூல்கள் பல
நூல்களைத் தேடிப் படிக்கத் தூண்டுவதாகவும்,
ஓவியம் மீதான ஈடுபாட்டையும், விமர்சனப்
பார்வையையும் உருவாக்கிக் கொள்ள உதவியது.
70, 80களின் இலக்கியச் சூழல் எப்படி இருந்தது?
எழுபது, எண்பதுகளில் இப்போது உள்ளதைப்
போல் அந்த நாட்களிலும் தீபம், கணையாழி,
தாமரை, எழுத்து, கசடதபற, அஃ, வானம்பாடி,
ஞானரதம், சதங்கை, தெறிகள், பிரக்ஞை என்று
ஏராளமான சிற்றிதழ்கள் வெளிவந்து
கொண்டிருந்தன. சுதேசமித்திரன் ஆண்டுதோறும்
வெளியிட்ட தீபாவளி மலர்கள் கூட
இலக்கியத்தரமாக இருந்தன. இடதுசாரி
மனோபாவம் கொண்டவர்கள் முற்போக்கு
இலக்கியம், பிற்போக்கு இலக்கியம் என்று
கூறிவந்தனர். இன்று பிரபல மார்க்ஸிய விமர்சகராக
அறியப்படுகிற கோவை ஞானி வானம்பாடியில்
எழுதிய ‘கல்லிகை’ என்ற நெடுங்கவிதையின் மூலம்
இலக்கிய உலகத்துக்கு அப்போதுதான்
அறிமுகமானார்.
இடதுசாரி இலக்கியத்துக்கென்று ‘தாமரை’,
‘செம்மலர்’, கோவை ஈஸ்வரனின் ‘மனிதன்’,
இளவேனிலின் ‘கார்க்கி’, கே.எம்.
«ஷீμகோபாலின் ‘சிவந்த சிந்தனை’,
‘வானம்பாடி’, புதிய தலைமுறை, உதயம் முதலான
பல பத்திரிகைகள் வெளிவந்து கொண்டிருந்தன.
ஆர்.ராஜேந்திரசோழன் ‘அஸ்வகோஷ்’ என்ற
பெயரில் செம்மலரிலும், உதயத்திலும் பிரச்சார
வாடை வீசாத பல அற்புதமான சிறுகதைகளை
எழுதி வந்தார். ஆர்.ராஜேந்திரசோழன் தொடர்ந்து
கதைகள் எழுதாமல் போனது ஒரு பேரிழப்புதான்.
அவரை அசோகமித்திரன் ‘Promising Writer’ என்று
பாராட்டியிருக்கிறார். இதேபோல் பிரக்ஞையிலும்,
கணையாழியிலும் அற்புதமான சிறுகதைகளை
எழுதிய சிவசங்கரா, ஆர்.பழனிவேலு போன்றோர்
பின்னால் எழுதாமல் போய்விட்டார்கள்.
இந்த இடதுசாரி இதழ்களில உதயமும்,
பிரக்ஞையும் தீவிரமான இடதுசாரி அரசியல்,
இலக்கியம் சார்ந்த கட்டுரைகளை வெளியிட்டன.
தாமரையும், செம்மலரும் இன்றுபோல் அன்றும்
வலது இடது கம்யூனிஸ்ட் ஆதரவு இலக்கியப்
பத்திரிகைகளே. இதனுடன் இலங்கையிலிருந்து
வெளிவந்த டொமினிக் ஜீவாவின் ‘மல்லிகை’ என்ற
பத்திரிகையையும் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
ஆனால் மல்லிகையைவிட 80களில் இலங்கையி
லிருந்து வெளியான ‘அலைகள்’ பத்திரிகை மிக
முக்கியமான சிற்றிதழ். சிறிகனகரட்ணா என்ற
அற்புதமான இடதுசாரி விமர்சகரின் கட்டுரை
அலைகளில்தான் படித்தேன்.
கைலாசபதியின் கட்டுரைகள் அப்போதே
புத்தகமாக வெளிவந்து விட்டது. கா.சிவத்தம்பியும்
அப்போது நூல்களை எழுதியிருக்கவில்லை
என்றாலும், தனது கட்டுரைகளின் மூலம்
தமிழகத்தில் பரிச்சயமாகி இருந்தார். இது இடதுசாரி
இயக்கத்தின் சூழல்.
வலதுசாரி இலக்கியம் என்பது தெளிவாக
வரையறுத்து விடமுடியாது. ஆனால், க.நா.சு.,
சி.சு.செல்லப்பா, வெங்கட்சாமிநாதன் போன்ற
விமர்சகர்கள் தங்களது கட்டுரைகளின் மூலம்
இலக்கியத்தில் உணர்ச்சிக்கும், கலாபூர்வமான
அழகியலுக்கும் அதிக அழுத்தம் தந்து எழுதினர்.
புதுக்கவிதையை இயக்கமாக வளர்த்தெடுத்த
பெருமை க.நா.சு.வுக்கும், செல்லப்பாவுக்குமே
உண்டு. க.நா.சு. பண்டித மனோபாவத்தை எதிர்த்த
மாதிரி, வெங்கட்சாமிநாதன் திராவிட, இடதுசாரி
மனோபாவத்தை இலக்கியத்தில் எதிர்த்தார்.
இலங்கையில் மு.தளையசிங்கம் தனது
போர்ப்பறை, மெய்யுள் முதலான கட்டுரைத்
தொகுதிகளில் இடதுசாரி இலக்கியத்தைச் சாடினார்.
இலக்கியத்திலும், தத்துவச் சிந்தனையிலும்
‘நற்போக்கு’ என்ற கருத்தை வலியுறுத்தினார்.
அவரது சிந்தனை கொஞ்சம் வறட்சியானதுதான்
என்றாலும், தளையசிங்கம் மிக முக்கியமான
பாதிப்பை அங்கு ஏற்படுத்தியவர். வறட்சி தட்டாத,
கலைக்கு அழுத்தம் கொடுத்த இடதுசாரி
விமர்சகர்களில் சிறிகனரட்ணாதான் முக்கியமானவர்
என்று எனக்குப் படுகிறது.
சி.சு.செல்லப்பாவின் கட்டுரைகள் கூட
வறட்சியானவைதான். ரொம்ப டெக்னிக்கலாக
செல்லப்பா இலக்கியத்தைக் கல்லூரிப் பேராசிரியர்
மாதிரி ஹிμம்வார். ஆனால், வெங்கட்சாமிநாதன்
அப்படியல்ல. அவரது எழுத்தில் வறட்டுத்தனம்
தலைகாட்டாது.
க.நா.சு.வின் படித்திருக்கிறீர்களா?
தொகுதிகள், இலக்கிய விசாரம் இம்மூன்றும் மிக
முக்கியமானவை. இலக்கிய விசாரத்தில்,
எழுத்தாளன் சோதனை முயற்சிகளைச் செய்து பார்க்க
வேண்டும் என்று கூறியிருப்பார். இது எனக்கு வேத
வாக்காயிற்று. எனது சிறுகதை, நாவல்களில்
பல்வேறுவிதமான நடை, உருவ சோதனைகளைச்
செய்து பார்த்திருக்கிறேன். இதற்குக் க.நா.சு. தான்
காரணம். வறட்சியைப் பற்றிய சிறுகதைகள்தான்
எஸ்தரும், மிருகமும். ஆனால், இரண்டிலும்
வித்தியாசமான மொழிநடை, உருவங்களைக்
கையாண்டிருக்கிறேன். பாம்பும் பிடாரனும் போன்ற
சில சிறுகதைகள் வித்தியாசமான நடையில்
எழுதப்பட்ட சிறுகதைகள். கடல்புரத்தில் நாவலில்
மேலோங்கி நிற்கும் உரைநடை பைபிள் உரைநடை.
வெங்கட்சாமிநாதன் ‘மார்க்ஸின் கல்லறையி
லிருந்து’ என்று எழுதிய கட்டுரை அப்போது
பரவலாகச் சர்ச்சிக்கப்பட்ட, பேசப்பட்ட கட்டுரை.
நவீன நாடகம், ஓவியங்கள், சினிமா என்று வெ.சா.,
தனது கலையனுபவத்தை இலக்கியம் தாண்டி பிற
கலைத் துறைகளுக்கும் விரித்திருக்கிறார்.
ஒரு நல்ல மிடில் மேகஸின் எப்படி இருக்கும்
என்பதற்கு 70க்கள் வரையிலான தீபம் இதழ்களைச்
சொல்லலாம். இதே தீபம் 80களில் வறட்டுத்தனமான
சிறுகதைகள், கட்டுரைகளை வெளியிட ஆரம்பித்து
விட்டது என்பது வேறு விஷயம். சில இதழ்களே
வெளிவந்தாலும் அஃ ஒரு அருமையான
இலக்கியச் சிற்றிதழ். அதன் விஷயத் தேர்வுகளிலும்,
வடிவமைப்பிலும் கலையம்சம் ஓங்கி நின்றது.
இதேபோல ‘நடை’யும் சில இதழ்களே
வெளிவந்தாலும், அதுவும் தனித்துவத்தோடு
வெளிவந்து நின்றது. நடையைப் பின்பற்றி
‘கசடதபற’ வெளிவந்தது. ஜெயகாந்தனை
ஆசிரியராகக் கொண்டு ‘ஞானரதம்’ வெளியானது.
முதலில் கிரௌன் சைஸில் வெளியான ஞானரதம்
பின்னர் ராயல் சைஸில் வெளியாக ஆரம்பித்தது.
ஆறேழு ஆண்டுக்காலம் எழுதாமலிருந்த
சுந்தர ராமசாமியின் சிறுகதை, நீண்ட இடை
வெளிக்குப்பின் ஞானரதத்தில் வெளிவந்தது.
எழுபதுகளின் இறுதியில்தான் நவீன
நாடகங்கள் மேடையேற ஆரம்பித்தன. ‘கூத்துப்
பட்டறை‘, ஞாநியின் ‘பரீக்ஷா’ போன்ற நாடக
இயக்க முயற்சிகள் தோன்றின. பாதல் சர்க்கார்
தமிழகத்துக்கு வந்தார். காந்தி கிராமத்தில் நாடகப்
பயிற்சிப்பட்டறை நடந்தது. சினிமாத் துறையில்
பிரக்ஞை நண்பர்கள் எழுபதுகளின் இறுதியில்
‘பூர்வா’ என்ற திரைப்படச் சங்கத்தைத் துவக்கினார்கள்.
சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவின் ‘திக்கற்ற பார்வதி’
பாபுநந்தன் கோடின் ‘தாகம்’, ருத்ரையாவின் ‘அவள்
அப்படித்தான்’, ஜான் ஆபிரஹாமின்
‘அக்கிரஹாரத்தில் கழுதை’ போன்ற புதிய அலைத்
திரைப்படங்கள் இதே 70, 80களில்தான்
வெளிவந்தன. பூனா பிலிம் இன்ஸ்டிடியூட்டிலிருந்து
சதீஷ் பகதூர் என்பவர் வந்து சென்னையில் சினி
அப்ரிஷியேஷன் கோர்ஸ்களை நடத்தியதெல்லாம்
இந்தக் காலக்கட்டத்தில்தான். கலை எழுச்சி மிகுந்த
காலகட்டம் அது.
இன்றைய தமிழ் இலக்கிய உலகில் மிகத்
தீவிரமாகச் செயல்பட்டுவரும் ஜெயமோகன்,
எஸ்.ராமகிருஷ்ணன் முதலியவர்களின்
எழுத்துக்கள் பற்றி,
தொடரும்……
எஸ் ஐ சுல்தான்
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், வண்ணநிலவன், வண்ணநிலவன் குறித்து, வண்ணநிலவன் நேர்காணல் and tagged , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s