சாரல் விருது விழா

ந.பாஸ்கர்

http://solvanam.com/?p=18831

நாஞ்சில் நாடன் உரையில் குறிப்பிடத்தக்க விஷயம் அவர் வண்ணநிலவனைப் புதுமைப் பித்தனின் நேரடி வாரிசு என்று அறிவித்ததுதான். “புதுமைப்பித்தனையும் கடந்து சென்றுவிட்ட எழுத்தாளர்கள் இருக்கிறார்கள், ஆனால் வண்ணநிலவன்தான் புதுமைப்பித்தனின் நேரடி வாரிசு” என்று அவர் குறிப்பிட்டார். வண்ணதாசனைப் பற்றி நிறைய எழுதிவிட்ட காரணத்தால் அன்றைய உரை முழுக்க முழுக்க வண்ணநிலவனுக்காக இருந்தது. “வண்ணநிலவன் இல்லையென்றால் நாஞ்சில் நாடன் என்ற நாவலாசிரியன் இன்று உங்கள் முன் நின்று கொண்டிருக்க மாட்டான்” என்று வண்ணநிலவனின் தாக்கத்தை வெளிப்படுத்தினார் நாஞ்சில்.
எஸ் ராமகிருஷ்ணனின் உரை பற்றி விரிவாக எழுதவேண்டிய அவசியமில்லை. இதை நீங்கள் வாசிக்கும்போது அவரது இணையதளத்தில் பதியப்பெற்று, அதை நீங்கள் வாசித்துமிருப்பீர்கள்.வண்ணநிலவனின் கதைகளின் இருண்மையை ரெம்ப்ராண்ட்டின் ஓவியங்களில் காணப்படும் ஒளி நிழல் கூட்டில் வெளிப்படும் கருமையோடு ஒப்பிட்டிருக்க வேண்டும் அவர். ஹெர்மான் ஹெஸ்சின் சித்தார்த்தா நாவலின் முடிவில், புத்தர் கோவிந்தனுக்குக் கூழாங்கல் கொடுத்து உண்மையை உணர்த்தும் கட்டத்தைச் சுட்டி ஏதோ ஒரு மாயம் நிகழ்த்தி அங்கே வண்ணநிலவனையும் வண்ணதாசனையும் இணைத்தார்- வண்ணநிலவனும் வண்ணதாசனும் ஒரு பெரும் நதியின் இரு கரைகள், இரு வேறு குரல்களில், இரு வேறு வகைகளில் பேசினாலும் அவர்கள் இருவரும் ஒரு பெரும் நதிக்குரியவர்கள் என்று சொல்லி, மேடையில் இருவரின் இருப்பையும் ஒருமித்த சிறப்பித்தலையும் நியாயப்படுத்தினார்
முழுகட்டுரையையும் விரிவாக வாசிக்க: சொல்வனம்:http://solvanam.com/?p=18831
This entry was posted in அனைத்தும், வண்ணநிலவன் குறித்து and tagged , , , . Bookmark the permalink.

2 Responses to சாரல் விருது விழா

  1. rathnavelnatarajan சொல்கிறார்:

    நல்ல பதிவு.
    நன்றி.

  2. வண்ணநிலவனும் வண்ணதாசனும் ஒரு பெரும் நதியின் இரு கரைகள், இரு வேறு குரல்களில், இரு வேறு வகைகளில் பேசினாலும் அவர்கள் இருவரும் ஒரு பெரும் நதிக்குரியவர்கள் என்று சொல்லி, மேடையில் இருவரின் இருப்பையும் ஒருமித்த சிறப்பித்தலையும் நியாயப்படுத்தினார்\\
    அற்புதமான உரையை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

பின்னூட்டமொன்றை இடுக